சிறிய, நடுத்தர நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்கான நிதியாதரவை அடுத்த திங்கட்கிழமை முதல் பெறுவர்.
புத்தாக்கத் தீர்வு மானியம் என்ற அந்தப் புதிய திட்டம், நிதியாதரவு தேவைப்படும் நிறுவனத்திற்கு 10,000 வெள்ளி வரையிலான உதவியை நல்கும். பயிற்சி பெறும் ஊழியர்களின் செலவை இந்த மானியம் 70 விழுக்காடு வரை குறைக்கும்.
வர்த்தக உருமாற்றமும் திறன் பயிற்சியும் ஒன்றுக்கொன்று அவசியம் என வர்த்தக தொழில், கல்வி மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட், தேசிய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் விழாவின் தொடக்கத்தில் இன்று கூறினார். இரண்டாவது முறையாக நடைபெறும் இந்த விழா, 200,000 வருகையாளர்களை ஈர்க்க முற்படுகிறது.

