மெர்டேக்கா தலைமுறையினருக்கான பொட்டலங்களுக்கான வரவேற்புக் கோப்புறைகளின் விநியோகம் இன்று தொடங்கியுள்ளது. ஜூலை மாதம் இறுதிக்குள் 400,000க்கும் அதிகமான பொட்டலங்கள் விநியோகம் செய்யப்படும்.
ஒவ்வொரு நாளும் தீவெங்கும் கிட்டத்தட்ட 30,000 கோப்புறைகள் உரியவர்களுக்குச் சமர்பிக்கப்படும் என்று 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்தது. இதற்கு முன்னதாக நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் சுமார் 80,000 கோப்புறைகள் விநியோகம் செய்யப்பட்டன.
கோப்புறையில் மெர்டேக்கா தலைமுறை அட்டை, 'சாஸ்' திட்டத்தில் அடங்கும் மருந்தகங்களுக்கான பட்டியல் ஆகியவற்றை அவர்கள் காணலாம்.

