ஊழியர்களுக்குப் பயிற்சி: சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குக் கூடுதல் நிதி ஆதரவு

ஊழியர்களுக்குப் பயிற்சி: சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குக் கூடுதல் நிதி ஆதரவு

3 mins read

ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க விரும்பும் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்குக் கூடுதல் நிதி ஆதரவு வழங்கப்பட இருக்கிறது. இந்தத் திட்டம் வரும் திங்கட் கிழமையிலிருந்து நடப்புக்கு வருகிறது.

புதிய உற்பத்தித்திறன் தீர்வு கள் மானியத்தின் ஸ்கில்ஸ் ஃபியூச்சர் பயிற்சி கட்டணக் கழிவு மூலம் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் $10,000 வரை வழங்கப்படும்.

பயிற்சிக்காகச் செய்யப்படும் செலவில் 70 விழுக் காட்டுக்கு மானியத்தைப் பயன் படுத்தலாம். தற்போதைய ஸ்கில்ஸ்ஃபியூச்சர் கட்டணக் கழிவு 90 விழுக்காடு வரை நிதி ஆதரவு வழங்குகிறது. இதை புதிய திட்டத்துடன் சேர்க்கும்போது நிறுவனங் களுக்குக் கூடுதல் சலுகை கிடைக்கிறது.

உதாரணத்துக்கு, $2,000 கட்டணம் கொண்ட பயிற்சிக்கு ஊழியரை அனுப்பும் நிறுவனம் $60 மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் நேற்று தொடங்கிய ஸ்கில்ஸ்ஃபியூச்சர் விழாவில் வர்த்தக, தொழில் மற்றும் கல்வி மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் உரையாற்றினார்.

"நிறுவன உருமாற்றமும் திறன் பயிற்சியும் ஒருசேர இயங்குபவை. மேலும் அதிகமான முதலாளிகள் தங்கள் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க பணம் ஒதுக்குகின்றனர். ஆனால் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க பணம் ஒதுக்கும் முதலாளிகளின் எண்ணிக்கை சீரற்ற நிலையில் ஏற்றம் கண்டு வருகிறது," என்றார் திரு சீ.

ஊழியர்களைப் பயிற்சிகளுக்கு அனுப்புவது தொடர்பில் பெரிய நிறுவனங்களைக் காட்டிலும் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் குறைந்த அளவில் செலவு செய்யும் போக்கு கொண்டிருப்பதாக திரு சீ சுட்டினார். இந்த நிலை தேசிய வருமான மன்றம் அண்மையில் மேற்கோள் காட்டியது.

"நமது ஊழியரணியில் 70 விழுக்காட்டை சிறிய, நடுத்தர நிறுவனங்கள் கொண்டுள்ளன. ஆனால் அவற்றில் மூன்றில் ஒரு நிறுவனம் மட்டுமே ஊழியர்களைப் பயிற்சிகளுக்கு அனுப்புகிறது.

"சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அவற்றின் திறன்கள், போட்டித் தன்மையை மேம்படுத்த ஊக்குவிக்கும் வகையில் கூடுதல் முயற்சி எடுக்கப்பட வேண்டும். இல்லாவிடில், திறன் இடைவெளி அதிகரித்து பொருளியல் போட்டித்தன்மை பாதிக்கப்படும்," என்று திரு சீ கூறினார்.

புதிய கட்டணக் கழிவு சலுகை யுடனான மேம்படுத்தப்பட்ட உற்பத்தித்திறன் தீர்வுகள் மானி யம் இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தின் நிதி ஒதுக்கீடு விவாதத்தின்போது அறிவிக்கப் பட்டது.

ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தி, வர்த்தக செயல் முறைகளையும் உற்பத்தித் திறனையும் மேம்படுத்த சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு இந்தத் திட்டம் கைகொடுக்கும் என்று ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் கூறியது.

மானியத்தைப் பெற விரும்பும் நிறுவனங்கள் அவற்றின் பயிற்சித் திட்டங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

நிறுவனங்களின் பயிற்சித் திட்டங்களை ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு மதிப்பீடு செய்த பிறகு ஒப்பதல் வழங்கும்.

சிறிய, நடுத்தர நிறுவனங் களுக்காகப் பயிற்சித் திட்டங்களை மேம்படுத்த தொழிற்சங்கங்கள், வங்கிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கணக்குத் தணிக்கை நிறுவனங்கள் ஆகிய வற்றுடன் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு இணைந்து செயல் படுவதாக திரு சீ குறிப் பிட்டார். இரண்டாவது முறையாக நடத்தப்படும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் விழா ஆறு வாரங்களுக்கு நடைபெறும். விழாவில் 200,000 பேர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், வெஸ்ட்கேட் மற்றும் சாங்கி சிட்டி பாயிண்ட்டுக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையங்களில் பயிலரங்குகள் நடத்தப்படும்.