சிங்கப்பூரில் ஆசிய வளர்ச்சி வங்கி அலுவலகம்

சிங்கப்பூரில் ஆசிய வளர்ச்சி வங்கி அலுவலகம்

2 mins read

ஆசிய வளர்ச்சி வங்கி, தன்னு டைய தனியார் துறை நடவடிக் கைகளை விரிவுபடுத்துவதற்கு ஆதரவாகச் சிங்கப்பூரில் அலுவ லகம் ஒன்றை அமைக்கிறது என்று நேற்று சிங்கப்பூரின் நிதி அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

சிங்கப்பூரில் அமையும் ஆசிய வளர்ச்சி வங்கியின் அலுவலகம் இந்த ஆண்டு பிற்பகுதியில் திறக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த அலுவலகம் 12 ஊழியர்களுடன் குறிப்பிட்ட காரியங்களில் ஒருமித்த கவனம் செலுத்தக் கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கான உடன்பாட்டில் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட்டும் அந்த வங்கியின் தலைவர் தகிஹிகோ நாக்காவும் ஜப்பா னின் ஒசாகா நகரில் நேற்றுக் கையெழுத்திட்டனர்.

அங்கு நடக்கும் ஜி20 உச்சநிலை மாநாட்டையொட்டி உடன்பாடு கையெழுத்தானது. இந்த உடன்பாட்டின் விளைவாக 2024ல் ஆசிய வளர்ச்சி வங்கியின் நடவடிக்கைகளில் மூன்றில் ஒரு பங்கு அளவிற்குத் தனியார் துறை திட்டங்கள் இடம்பெற்று இருக்கும் ஆசிய வளர்ச்சி வங்கியை ஏற்படுத்திய நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வங்கி உறுப்பு நாடு களின் அரசாங்கங்களுக்குத் தொழில்நுட்ப உதவிகளையும் கடன்களையும் மானியங்களையும் வழங்குகிறது.

வளரும் நாடுகளின் தனியார் துறைகளுக்கு நேரடி உதவி களையும் ஆசியான் வளர்ச்சி வங்கி செய்து வருகிறது.

இந்த வட்டாரத்தின் வளர்ச்சி வேகத்தைக் கட்டிக்காக்க 2030ஆம் ஆண்டு வரை உள்கட்டமைப்பு வசதி களில் US$1.7டிரிலியன் ($2.3டிரிலியன்) முதலீடு தேவைப்படுகிறது.

இதன்தொடர்பில் பலதரப்பு வளர்ச்சி வங்கிகளுடன் நாடுகள் சேர்ந்து செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது என்று நிதி அமைச்சர் திரு ஹெங் குறிப்பிட்டார்.

ஆசிய வளர்ச்சி வங்கி, சிங்கப்பூரின் நிதி மற்றும் சேவை வசதிகளின் துணையுடன் இந்த வட்டாரத்தின் உள்கட்டமைப்புத் தேவைகளை நிறைவேற்று வதற்காக தனியார் துறை முதலீடுகளை ஈர்ப்பதில் மும்முர மாக ஈடுபடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அமைச்சர் கூறி னார்.

ஆசிய வளர்ச்சி வங்கியின் தனியார் துறை நடவடிக்கைகளை விரிவுபடுத்த சிங்கப்பூர் பொருத்தமான முன்னணி நிதி மற்றும் வர்த்தக மையமாக இருக்கிறது என்று இந்த வங்கியின் தலைவர் திரு நாக்காவ் தெரிவித்தார்.

கைபேசியைப் பார்க்காது கவனமாக சாலையைக் கடக்க வலியுறுத்தும் சின்னங்கள்