கவிமாலையின்20ஆம்ஆண்டு: ஜெயபாஸ்கரன் சொற்பொழிவு

கவிமாலையின்20ஆம்ஆண்டு: ஜெயபாஸ்கரன் சொற்பொழிவு

1 mins read

19 ஆண்டுகளுக்கு முன் கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளில் தொடங்கப்பட்ட கவி மாலை, 20ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

20ஆம் ஆண்டின் முதல் மாதாந்திரக் கவிமாலை இன்று மாலை 6.45 மணிக்கு பூகிஸ் எம்ஆர்டி நிலையத்துக்கு அடுத்த தேசிய நூலகத்தின் 5வது தளத்தில் நடைபெறவுள்ளது.

பிடித்த, வடித்த, படித்த கவிதையை வாசித்தல், கவிஞர் பா. திருமுருகனின் போட்டிக் கவிதை விமர்சனம், கவிஞர் க. பாலமுருகன் தரும் கவிஞர் அறிவுமதியின் நூல் கருத்துரை, கவிஞர் கி. கோவிந்தராசுவின் நெறியாளுமையுடன் நிகழ்ச்சி நடைபெறும்.

இம்மாதம் 'ஊடகம்' எனும் தலைப்பிலான கவிதைப் போட்டி, பரிசளிப்பு போன்ற வழக்கமான அங்கங்கள் உண்டு.

அடுத்த மாத கவிதைப் போட்டித் தலைப்பு 'பேராசான்'.

சிங்கப்பூருக்கான இலங்கையின் துணைத் தூதராகப் பணியாற்றி, பணிமாற்றத்தின் காரணமாக விடைபெறப்போகும் திரு. அமீர் அஜ்வத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்.

மேலும் தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கவிஞர் ஜெய பாஸ்கரன் ' கற்றுக்கொடுக்கிறது மரம்' எனும் தலைப்பில் சென்னை யிலிருந்து இணையம் வழி சொற்பொழிவாற்ற இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் கவிஞர் ஜெயபாஸ்கரனின் சொற்பொழி வைக் கேட்டு ரசிக்க தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் கவிமாலை அமைப்பினர் அழைப்பு விடுக்கின்றனர்.

நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்களுக்கு 98536465 எனும் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.