கைபேசியைப் பார்க்காது கவனமாக சாலையைக் கடக்க வலியுறுத்தும் சின்னங்கள்

கைபேசியைப் பார்க்காது கவனமாக சாலையைக் கடக்க வலியுறுத்தும் சின்னங்கள்

1 mins read
4d13bd9c-4662-4c94-824a-4253f85675c3
கவனமாக சாலையைக் கடக்க நினைவூட்டும் ஒட்டு வில்லைகள் நடைபாதையில் ஒட்டப்பட்டுள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கைபேசியைப் பார்த்துக்கொண்டு சாலையைக் கடக்காமல், கவன மாக சாலையைக் கடக்க பாதசாரிகளுக்கு நினைவூட்டும் வகையில் அங் மோ கியோ அவென்யூ 3க்கும் 8க்கும் இடைப்பட்ட சாலைச் சந்திப்பு, அங் மோ கியோ எம்ஆர்டி நிலையத்தின் வாசல் ஆகிய வற்றில் உள்ள நடைபாதைகளில் மஞ்சள் நிறத்தில் பெரிய ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்டுள்ளன.

அந்த ஒட்டு வில்லைகளில் 'கைபேசியைப் பார்க்காதீர்' என வலியுறுத்தும் படமும் 'லுக் அப்' என்ற வாசகமும் குறிப்பிடப் பட்டுள்ளன. சாலைச் சந்திப்பில் உள்ள போக்குவரத்து விளக்கு களுக்குப் பக்கத்தில் கவனச் சிதறல் ஏதுமின்றி சாலையைக் கடக்க வலியுறுத்தும் வாசகங் களைக் கொண்ட பதாகைகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த அறிமுகத் திட்டத்தை நிலப் போக்குவரத்து ஆணையம், போக்குவரத்து போலிஸ் படை, சிங்கப்பூர் கனிவன்பு இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து அங் மோ கியோ குழுத் தொகுதி நடத்துகிறது.

கைபேசியைப் பார்த்துக் கொண்டே சாலையைக் கடக்கும் சிலர் நூலிழையில் உயிர்தப் பியதை நேரில் பார்த்ததாகக் கடந்த நான்கு மாதங்களில் ஐந்து பேர் தம்மிடம் கூறியிருப்ப தாக அங் மோ கியோ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் திரு ஆங் ஹின் கீ தெரிவித்தார்.