குடிபோதையில் கார் ஓட்டி பேரங்காடியை சேதப்படுத்தியவர் கைது

குடிபோதையில் கார் ஓட்டி பேரங்காடியை சேதப்படுத்தியவர் கைது

1 mins read
bbad436d-0cef-439f-ad65-c2eae4940c37
விபத்து காரணமாக பேரங்காடிக்குச் சொந்தமான அலமாரிகளும் குளிர்பதனப்பெட்டிகளும் விழுந்து நொறுங்கின. படம்: ‌ஷின்மின் -

குடிபோதையில் காரை ஓட்டி, காரின் கட்டுப்பாட்டை இழந்து பேரங்காடிக்கு வெளியே இருந்த அலமாரிகள், குளிர்பதனப் பெட்டிகள் ஆகியவை மீது மோதிய ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை 2.10 மணி அளவில் புளோக் 316B அங் மோ கியோ ஸ்திரீட் 31ல் நிகழ்ந்தது.

சம்பவத்தின் விளைவாகப் பேரங்காடிக்கு வெளியே இருந்த பொருட்கள் சேதமடைந்ததாகவும் எவரும் காயமடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

குடிபோதையில் கார் ஓட்டிய 37 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கார் ஓட்டிய அந்த ஆடவர் காரின் கட்டுப்பாட்டை இழந்து பேரங்காடிக்கு வெளியே இருந்த உலோகத் தடுப்பு, பேரங்காடிக்கு வெளியே வைக்கப்பட்ட பொருட்கள் மீது மோதியதாக சம்பவத்தை நேரில் கண்ட 50 வயது திரு ஹு ‌ஷுன் ஃபா, ‌ஷின்மின் நாளிதழிடம் கூறினார்.