வாடிக்கையாளர் ஒருவரின் வீட்டின் வெளியே வைக்கப்பட்டி ருந்த ஒரு ஜோடி காலணிகளைத் திருடியதாக நம்பப்படும் 'கிராப்ஃபூட்' உணவு விநியோக ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுவா சூ காங் பகுதியில் உள்ள கியட் ஹோங் குளோஸ் வீட்டுக்கு வெளியே இம்மாதம் 27ஆம் தேதி இரவு 9 மணிக்கு நடைபெற்ற திருட்டுச் சம்பவம் குறித்து போலிசுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
போலிஸ் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சி களையும் தீவிர விசாரிப்புகளையும் வைத்து ஜூரோங் போலிஸ் பிரிவின் அதிகாரிகள் நேற்று முன்தினம் அந்த 27 வயது சந்தேக நபரைக் கைது செய்தனர்.
அந்த வீட்டுக்கு உணவைக் கொடுத்துவிட்டு, வீட்டுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த ஒரு ஜோடி காலணிகளை அந்த நபர் எடுப்பது காணொளியில் பதிவாகியிருந்தது. உணவு வைக்கப்படும் பையில் காலணிகளை வைத்தசெயல் குறித்தும் இணையவாசிகள் அக்கறை தெரிவித்தனர்.
"சம்பந்தப்பட்ட விநியோக ஊழியரின் கணக்கு தற்காலிமாக ரத்து செய்யப்பட்டுள்ளது," என்று கிராப் கூறியது.

