ஒரு கனரக லாரியும் ஒரு நீண்ட லாரியும் மோதிக் கொண்டதில், கனரக வாக னத்தின் ஓட்டு நர் மரணம் அடைந்தார். நேற்று முன் தினம் துவாஸ் சவுத் அவென்யூ 3ல் விபத்து குறித்து பிற்பகல் 2.11 மணியளவில் போலி சாருக்குத் தகவல் கிடைத்தது.
கனரக லாரியை ஓட்டிய 62 வயது ஆடவர், இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததால் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.
விபத்து தொடர்பில் கிடைத்துள்ள ஒரு காணொளியில், நீண்ட லாரி வலப்பக்கம் திரும்புவதற்காகக் காத்திருந்த போது விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. இரு தடங்கள் கொண்ட சாலையின் வலத்தடத்தில் சென்றுகொண்டிருந்த கனரக லாரி, முன்னால் இருந்த நீள் லாரியின் பின்புறத்தை இடித்தது. அதில் நீள் லாரி முன்னால் வேகமாக நகர்ந்து அப்படியே ஒரு பக்கமாகச் சாய்ந்துவிட்டது (படங்கள்).
விபத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்களில் கனரக லாரியின் முன்பக்கம் வெகுவாகச் சேதமடைந் திருந்ததைக் காண முடிந்தது. அத்துடன் ஓட்டுநர் பக்கம் உள்ள கதவு நெளிந்துபோய், சன்னல் கண்ணாடி உடைந்து சிதறியிருந்தது. விபத்தின்போது இரு வாகனங்களிலும் பயணிகள் இல்லை. விபத்து குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

