உபின் தீவில் சரிவுப் பாதைகள், தளமேடைகள் அமைக்கப்படும்

உபின் தீவில் சரிவுப் பாதைகள், தளமேடைகள் அமைக்கப்படும்

2 mins read
bbde8e09-b66e-454b-b694-fc9c12cfd7ad
தற்போதுள்ள உபின் தீவின் படகுத்துறையில், படகிலிருந்து தீவுக்குள் செல்ல சக்கர நாற்காலி பயனாளர்கள் சிரமத்தை எதிர்நோக்குகிறார்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சக்கர நாற்காலி பயனாளர்களுக்கு அதிக வசதியை ஏற்படுத்திக் கொடுக்க உபின் தீவில் சரிவுப் பாதைகளும் தளமேடைகளும் அமைக்கப்படுவதுடன் அத்தீவில் புதிய படகுத்துறையும் அமைக்கப் படும்.

அத்தீவில் பெக்கான் பாறை நிலத்தின் ஈரநிலப் பல்லுயிர் பகு தியிலும் தீவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சதுப்புநிலக் காடுகளிலும் பழமைப் பாதுகாப்புப் பணிகள் மேம்படுத்தப்படும் என் றும் தேசிய பூங்காக் கழகம் நேற்று தெரிவித்தது.

சாங்கி படகுத்துறையிலிருந்து உபின் தீவுக்குப் பயணிகளை ஏற்றிச்செல்லும் படகுகளிலும் சீரமைப்புப் பணிகளை மேற்கொண் டால் படகிலிருந்து தீவுக்குச் செல் லும் பயணிகளுக்கு அதிக வசதி யாக இருக்கும்.

மேலும் தீவுக்குள் பயணம் செய்யும் வேன்களிலும் அசையும் சரிவுப் பாதைகளையும் தளமேடை களையும் பொருத்தலாம் என்பதும் மேம்பாட்டுத் திட்டங்களில் ஒன்று.

தீவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள 'உபின் லிவிங் லேப்' ஆய் வுக்கூடத்தில் சக்கர நாற்காலி பய னாளர்களுக்கு ஏதுவான மிதக்கும் பாலங்களைக் கொண்ட படகுத் துறையும் அமைக்கப்படும்.

அங்கு கடல் அலை அமைதி யாக இருக்கும் என்பதால் மிதக் கும் மேடையில் சக்கர நாற்காலி பயனாளர்களுக்கும் பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்தப் புதிய படகுத்துறையின் வடிவமைப்பு விவரங்கள் இவ் வாண்டின் மூன்றாம் காலாண்டில் வெளியிடப்படும்.

நேற்று அத்தீவில் ஏற்பாடு செய்யப்பட்ட உபின் தினம் 2019 விழாவில் புதிய திட்டங்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

நேற்று விழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சரு மான டெஸ்மண்ட் லீ, "எட்டாவது ஆண்டாகக் கொண்டாடப்படும் உபின் விழாவுக்கு சமூகத்திட மிருந்து வலுவான ஆதரவு கிடைத்து வருகிறது. ஆறு வாரங் கள் நடைபெற்ற படகு வலித்தல், இயற்கை நடைப் பயணங்கள், பற வைகளை ரசித்தல், சைக்கிளோட் டம், கைவினைப் பொருட்கள் செய்தல் போன்ற பலவித நடவடிக் கைகளில் 4,500 பேர் பங்கேற்ற னர்," என்றார்.

உபின் தீவு பற்றிய கலாசார மற்றும் இயற்கை மரபுடைமை பற்றி தங்கள் மாணவர்கள் கூறிய கருத் துகளை ஆசிரியர்கள் பகிர்ந்து கொள்ளும் ஒரு தளமாக அமையும் கற்றல் கருத்தரங்கு ஒன்று இவ் வாண்டு பிற்பகுதியில் இடம்பெறும்.