தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிநவீன 'சாஃப்டி நகரம்' 2023ல் திறப்பு

2 mins read
57fd2440-6f2d-4c7e-a54a-a0697006585c
வெள்ளிக்கிழமை அன்று தற்காப்பு, அறிவியல், தொழில்நுட்ப அமைப்புத் தலைமை நிர்வாகி டான் பெங் யாம், தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், தற்காப்புப் படைத் தலைவர் மெல்வின் ஓங், ராணுவத் தலைவர் கோ சி ஹௌ ஆகியோர் சுவா சூ காங் அஸ்தி மாடம் அருகே அமைந்துள்ள இடத்தில் நில அகழ்வு விழாவில் கலந்துகொண்டு கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தனர். படம்: தற்காப்பு அமைச்சு -

பேருந்து நிலையம், எம்ஆர்டி நிலை யம், ஹோட்டல், மருத்துவமனை, கடைத்தொகுதி, சாலைக் கட் டமைப்புகள் என தத்ரூபமான, சவால் நிறைந்த சூழல்களில் சிங்கப்பூர் ஆயுதப் படைகள் பயிற்சி பெறுவதற்காக ஓர் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையமாக புதிய 'சாஃப்டி நகரம்' 2023ஆம் ஆண்டு முதல் செயல் படத் தொடங்கவுள்ளது.

கிட்டத்தட்ட பீஷான் வட்டாரத் தின் அளவுக்கு அமையவுள்ள 'சாஃப்டி நகரம்', அறிவார்ந்த தொழில்நுட்பங்களைக் கொண் டிருக்கும். பயிற்சியின்போது வீரர்களை நோக்கிச் சுடக்கூடிய இலக்குகளுடன் புகை, பேரொலி போன்றவை போர்ச் சூழலைத் தரும். பயிற்சி அனுபவம் தத்ரூபமாகவும் பயனுள்ளதாகவும் அமைய, பயிற்சி வீரர்களின் அனைத்து செயல்பாடுகளும் திரட்டப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்டு அதை ஒட்டித் துல்லியமான கருத்து தெரிவிக்கப்படும். அத்துடன் வீரர் களின் செயல்பாடுகளை மேம் படுத்தவும் இது உதவும் என்று கூறப்பட்டது.

இப்புதிய அம்சங்கள் குறித்த விவரங்களை நேற்று தற்காப்பு அமைச்சு வெளியிட்டது.

'சாஃப்டி நகரம்' கட்டி முடிக்கப்படும்போது, உலகிலேயே அதிநவீன வசதிகளுடன் நகர்ப்புற செயல்பாடுகளுக்கு ஏற்ற ராணுவப் பயிற்சித் தளங்களில் ஒன்றாக அமையும் என்றார் டாக்டர் இங்.

சிங்கப்பூர் ராணுவமும் தற் காப்பு, அறிவியல், தொழில்நுட்ப அமைப்பும் இணைந்து கிட்டத்தட்ட 88 ஹெக்டர் நிலப்பரப்பு அளவுடன் $900 மில்லியன் செலவில் 'சாஃப்டி நகரம்' திட்டத்தின் கீழ் முதல் இரு கட்டங்களுக்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கவுள்ளன. அதன்படி 2023ஆம் ஆண்டு முதல் கட்டங்கட்டமாக திறக்கப்படும்.

திட்டம் குறித்து 2017ஆம் ஆண்டில் டாக்டர் இங் அறிவித்த போது பயிற்சிக்கான மொத்த இடத்தை உருவாக்கி முடிப்பதற்கு பத்தாண்டுகள் ஆகும் என்று குறிப்பிட்டார். இதன் தொடர்பில் 'பொயன்' நீர்த்தேக்கத்திற்கு அரு கில் அமையவுள்ள திட்டத்தின் இரண்டாம் கட்டம் குறித்து எந்த ஒரு கால வரையறையும் குறிப்பிடப் படவில்லை.

எதிர்கால தலைமுறை வீரர்கள் இணைந்து பயிற்சி பெற்று உறவுகள் ஏற்படுத்திக்கொள்ள 'சாஃப்டி நகரம்' ஓர் இடமாக அமையும் என்று அமைச்சர் இங் குறிப்பிட்டதுடன் சிங்கப்பூர் ஆயுதப்படைக்கு 'சாஃப்டி' முக்கியப் பங்காற்றி வந்துள்ளதாகவும் பகிர்ந்துகொண்டார்.