தமிழ் முரசு படியுங்கள்! அதிர்ஷ்டக் குலுக்கில் வெல்லுங்கள்!

தமிழ் முரசு படியுங்கள்! அதிர்ஷ்டக் குலுக்கில் வெல்லுங்கள்!

1 mins read

தமிழ் முரசின் 84 ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தை ஒட்டி வாசகர்கள் சிறப்புப் பரிசு ஒன்றை வெல்ல வாய்ப்பு பெறுகிறார்கள்! இன்று முதல் ஜூலை 7ஆம் தேதிவரை தமிழ் முரசு அச்சுப்பிரதியில் தினசரி கூப்பன் ஒன்று அச்சிடப்படும். ஒவ்வொரு கூப்பனிலும் வெவ்வேறு குறியீட்டு எண்கள் வெளியிடப்படும். அந்த குறியீட்டு எண்களை ஒவ்வொரு நாளும் குறுஞ்செய்தியாகவோ அல்லது tmsub.sg/sofa இணையம் வழியோ அனுப்பி வைக்க வேண்டும்.

ஏழு நாட்களும் தொடர்ந்து வெளியிடப்படும் குறியீட்டு எண்களை அனுப்பி வைப்போர் ஏழு நாட்களின் இறுதியில் நடைபெறும் அதிர்ஷ்டக் குலுக்குக்குத் தகுதிபெறுவர். தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளருக்கு ஜூலை 22ஆம் தேதியன்று கோர்ட்ஸ் ஆதரவுடன் $5399 மதிப்புள்ள லாரன்ஸ் எல்-வடிவ 'ஃபேப்ரிக்' சோஃபா ஒன்று வழங்கப்படும். தொடர்ந்து தமிழ் முரசைப் படியுங்கள், சிறப்புப் பரிசை வெல்லுங்கள்.