பாலியல் துன்புறுத்தல்: ஆடவர் கைது

பாலியல் துன்புறுத்தல்: ஆடவர் கைது

1 mins read

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் 29 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லிங்டன் சர்க்கிள் சாலையில் ஒருபெண்ணை அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவர் மானபங்கப்படுத்தி யதாக கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.50 மணிக்கு போலிசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலிஸ் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சி களின் உதவியோடு உட்லண்ட்ஸ் போலிஸ் பிரிவு அதி காரிகள் அந்த ஆடவரின் அடையாளத்தை உறுதி செய்து அவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

அந்த ஆடவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட் டப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆடவருக்கு 2 ஆண்டுக்கும் குறையாத பத்து ஆண்டுக்கு மேற்போகாத சிறை யும் பிரம்படியும் விதிக்கப்படும்.