மூத்த அமைச்சர் டியோ: குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்கவும்

மூத்த அமைச்சர் டியோ: குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்கவும்

1 mins read

குடும்பங்களுடன் தரமான நேரத்தைச் செலவழிப்பதை ஊக்குவிப்பதற்காக, 'ஃபேமிலிஸ் ஃபோர் லைஃப்' மன்றம் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்திருந்த வருடாந்திர நிகழ்வில் 10,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கொண்டாட்ட நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கி ணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன், குடும்பத்தைத் தாண்டிய உறவுகளுடன் வலுவான உறவை வளர்த்துக் கொள்வது முக்கியம் என்றார்.

"இளம் வயதினர் உற்சாகமாக வளர்வதற்கும் குடும்பத் தின் முதிய உறுப்பினர்கள் தங்கள் முதுமைக் காலத்தைத துடிப்புடன் அனுபவிக்கவும் குடும்பங்கள் உதவுகின்றன," என்றும் திரு டியோ கூறினார்.

சாஃப்ரா அமைப்பின் பங்காளித்துவ ஆதரவுடன் இந்நிகழ்வு சாஃப்ரா பொங்கோல் மனமகிழ் மன்றத்தில் நடைபெற்றது. பொங்கோல் வாட்டர்வே பூங்கா நெடுகில் நடைபெற்ற ஐந்து கிலோ மீட்டர் குடும்ப கேளிக்கை நடை, உருட்டுப்பந்து, பதாகையில் ஓவியம், சு‌ஷி உணவு தயாரிக் கும் பயிலரங்கு, இரவில் வெட்டவெளியில் திரைப்படம் பார்த்தல், வாணவேடிக்கை ஆகியவை பங்கேற்பாளர்களை மகிழ்வித்தன.