கடந்த இரண்டு ஆண்டுகளாக மாபெரும் சிங்கப்பூர் விற்பனை காலத்தின்போது கடைகளிலிருந்து திருடும் சம்பவங்களும் ஆட்களிடமிருந்து திருடும் சம்பவங்களும் அதிகரித்திருப்பதால், ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள கடைத் தொகுதிகளில் போலிஸ் தனது சுற்றுக்காவல் பணிகளை அதிகரித்துள்ளது.
ஆர்ச்சர்ட் அக்கம்பக்க போலிஸ் மையத்தின் சமூக போலிஸ் அதிகாரிகள் ராஃபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் தேசிய போலிஸ் மாணவர் படையினருடன் சேர்ந்து கடைத்தொகுதியில் உள்ள வாடிக்கையாளர்களிடம் கடைகளிலிருந்து திருடுதல், ஆட்களிடமிருந்து திருடுதல் ஆகியவை தொடர்பான விழிப்புணர்வு ஆலோசனைக் குறிப் புகளை விநியோகம் செய்வார்கள் (படம்) என்று சிங்கப்பூர் போலிஸ் படை நேற்று முன்தினம் அறிவித்தது.
மாபெரும் சிங்கப்பூர் விற்பனை காலத்தின்போது கடை களிலிருந்து திருடும் சம்பவங்களின் எண்ணிக்கை 2017ல் 676ஆக இருந்தது. கடந்த ஆண்டில் அது 700க்கு உயர்ந் தது. 25வது ஆண்டாக நடைபெறும் மாபெரும் சிங்கப்பூர் விற்பனை 1994ஆம் ஆண்டில் தொடங்கி, சிங்கப்பூரின் மிகப் பெரிய விற்பனை நிகழ்ச்சியாக உருவெடுத்துள்ளது. மாபெரும் சிங்கப்பூர் விற்பனை ஜூன் மாதம் 21ஆம் தேதி யிலிருந்து ஜூலை மாதம் 28ஆம் தேதி வரை நடைபெறும்.

