கடற்படையின் தேசியசேவையாளர்கள் பல்வேறு பணிகளை மேற்கொள்வர்

கடற்படையின் தேசியசேவையாளர்கள் பல்வேறு பணிகளை மேற்கொள்வர்

2 mins read

சிங்கப்பூரின் கடற்படை கப்பல் களில் இதற்கு முன் தொழில்முறை சேவையாளர்கள் கவனித்து வந்த ஆளில்லா வானூர்தி தொடர்பான பணிகளை இப்போது முழுநேர தேசிய சேவையாளர்கள் கவனித்து வருகிறார்கள்.

குறைவான வேலைவாய்ப்பு உடற்தகுதி (பெஸ்) உள்ளவர்கள் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் கடற்படை தற்காப்பு நடவடிக்கை கள் மையத்தில் பணியமர்த்தப்படு கிறார்கள். முன்பு இந்த வேலை களை 'பெஸ் ஏ' மற்றும் 'பெஸ் பி' தகுதியுடைய தொழில்முறை சேவையாளர்கள் ஆற்றினார்கள்.

இணையப் பாதுகாப்பு, சட்ட மற்றும் கடற்துறை நடவடிக்கைகள் போன்ற நிபுணத்துவ திறன்கள் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட தயார்நிலை தேசிய சேவையாளர்கள், பணிக்கு அழைக்கப்படும் போது அவர்களின் திறனுக்கேற்ற பணிகளில் அமர்த்தப்படுகின்றனர். இந்த முறை மூலம், சிங்கப்பூர் குடியரசு கடற்படை தனது சேவை யாளர்களை திறனுக்கேற்ற பணி களில் அமர்த்துவதால், சிங்கப்பூரின் குறைந்துவரும் குழந் தைப் பிறப்பு விகிதத்தால் வரும் 2030ஆம் ஆண்டில் மூன்றில் ஒரு பகுதி குறையும் என்று எதிர்பார்க் கப்படும் தேசிய சேவையாளர்களின் எண்ணிக்கையை ஈடுகட்ட முடியும்.

சிங்கப்பூர் ஆயுதப்படை எதிர் நோக்கும் மனிதவள சவால்களில் இது ஆகப் பெரியது என்று தற் காப்பு அமைச்சர் இங் எங் ஹென் கடந்த வாரம் அளித்த தமது வரு டாந்திர பேட்டியில் தெரிவித்தார். "அனைத்து சேவைகளிலும் குறைவான மனிதவளத்தை வைத் துக்கொண்டு, சிறந்த போர்க்கால சக்தியைப் பெற வேண்டுமானால், தேசிய சேவையாளர்கள், தொழில் துறை சேவையாளர்கள் ஆகியோ ரின் ஆற்றவல்களும் பணியமர்த்த லும் மாற வேண்டும்.

"சிங்கப்பூர் ஆயுதப்படை மட் டும் இத்தகைய சவாலை எதிர் நோக்கவில்லை. எல்லா ராணுவங் களும் இதை எதிர்நோக்குகின்றன. அவையும் குறைவான மனித வளத்தைக் கொண்டு நிறைவான சேவை வழங்க பாடுபடுகின்றன.

"சிங்கப்பூர் ஆயுதப்படையில் முன்பு போர்க்கால உடலுறுதி யுடையவர்கள், போர்க்கால உடலு றுதியற்றவர்கள் என்று இரு பிரிவி னர் இருப்பார்கள். அந்த முறை இப்போது நடைமுறைக்கு ஒத்து வராது. ஆகவே, அதில் அதிக பலன் இல்லை என்பதால் அதை நாங்கள் நிறுத்தி விட்டோம்," என் றும் அமைச்சர் விளக்கினார். "தேசிய சேவையாளர்களின் திறன்களுக்கும் தகுதிகளுக்கும் ஏற்றவாறு தேசிய சேவையில் அவர்களுக்குப் பொருத்தமான பணியில் அமர்த்துவது பற்றியும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது," என்றும் டாக்டர் இங் சொன்னார்.