அங்கீகரிக்கப்படாத பொருட்களை அடங்கியுள்ள நான்கு சரும கிரீம்களை (படம்) வாங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் சுகாதார அறிவியல் ஆணையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
டயப்பர் சொறிக்காக மலேசியக் கடை ஒன்றில் வாங்கப்பட்ட பெயரில்லாத கிரீம் பூசப்பட்ட ஒரு வயதுக்கும் குறைவான குழந்தை மருத்துவமனையில் அனுமதிப்பட்டது. மற்ற மூன்று கிரீன்களை வாடிக்கையாளர்கள் தோல் அழற்சிக்காக வாங்கினர். D'Splendid Kidzema Cream, Clair De Lune P. Tuberose Day Cream, Clair Lune S. Involcurata Night Cream ஆகியவையே அந்த மூன்று கிரீம்கள். பெயரில்லாத கிரீம் உட்பட இந்த நான்கு கிரீம்களைப் பயன்படுத்துவோருக்கு முதலில் நல்ல நிவாரணம் கிடைத்தாலும் அதைப் பயன்படுத்துவதை நிறுத்திய பிறகு நிலைமை மோசமாகியது.
மருத்துவமனையில் அனுமதிப்பட்ட குழந்தை இப்போது வீடு திரும்பி, வெளிநோயாளி சிகிச்சை பெற்று வருகிறது. இந்தக் கிரீம்களைப் பயன்படுத்தி ஒவ்வாமை ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுமாறு பொதுமக்களுக்கு ஆலோசனை கூறப்படுகிறது.

