வாட், ஜிஎஸ்டி வரி: சுமைகள் குறைவான நாடு சிங்கப்பூர்

வாட், ஜிஎஸ்டி வரி: சுமைகள் குறைவான நாடு சிங்கப்பூர்

2 mins read
846f8bff-6b49-45a7-bd41-e13acc1b98c5
மரினா பே சாண்ட்ஸில் 'தி ஷாப்ஸ்' கடைத்தொகுதியில் உள்ள ஆடம்பரக் கடை ஒன்றில், தான் வாங்கிய பொருளுக்கு ஒருவர் தொகை செலுத்துகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மதிப்புக் கூட்டு வரி (வாட்), பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆகியவற்றின் விதிகளை மதித்து நடப்பதன் தொடர்பிலான நிர்வாகச் சுமைகளையும் இணக்க நிபந்தனை களையும் 'யுஎன்எஸ்டபிள்யூ சிட்னி' என்ற நிறுவனமும் 'கேபிஎம்ஜி' என்ற நிறுவனமும் ஆராய்ந்தன. இதில் சிங்கப்பூர் முதலிடத்தில் வந்து இருக்கிறது.

இந்த ஆய்வு சென்ற செப்டம் பரில் தொடங்கியது. அது இணக் கச் சுமை அட்டவணை என்ற ஓர் அட்டவணையை உருவாக்கி உள்ளது. அந்த அட்டவணையில் 1வது நிலை என்பது மிகவும் குறைவான வரிச் சுமைகளைக் கொண்ட நிலையைக் குறிக்கும்.

உலகம் முழுவதும் 47 நாடு களை ஆய்வு உள்ளடக்கியது. அதில் 14 நாடுகள், இந்த அட்ட வணையில் நான்கு அல்லது அதற் கும் குறைந்த நிலைகளைப் பெற்று இருக்கின்றன. 15 நாடுகள் ஆறு அல்லது அதற்கும் அதிக நிலை களில் உள்ளன.

இந்த நாடுகளில் இந்த வரி மூலம் வரி செலுத்துவோருக்கும் நிர்வாகிகளுக்கும் ஏற்படக்கூடிய சுமைகளைக் குறைக்க கொள்கைச் சீரமைப்புகள் தேவை என்பது தெரியவந்துள்ளது.

மொத்தம் 10 நிலைகளைக் கொண்ட அந்த அட்டவணையில் சிங்கப்பூர் மட்டுமே 2வது நிலை யுடன் முதலிடத்தைப் பிடித்து உள்ளது. ஆஸ்திரேலியா, கோஸ்டா ரிகா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகியவை 3வது புள்ளியில் உள்ளன.

வரி செலுத்துவோருக்கு வாட் வரி மூலம் ஏற்படக்கூடிய சுமை களை யுஎன்எஸ்டபிள்யூ நிறுவனம், 27 அம்சங்களைக் கொண்டு மதிப்பிட்டது.

இந்த வரிகள் தொடர்பிலான சுமைகள் குறைவாக இருக்கக் கூடிய நிர்வாகங்களிடம் இருந்து அரசாங்கங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆய்வு யோசனை தெரிவித்துள்ளதாக கேபிஎம்ஜி நிறுவனம் சுட்டிக்காட்டியது.