எண்ணெய்ப் படிவுகள் அகற்றம்

எண்ணெய்ப் படிவுகள் அகற்றம்

1 mins read
2050fc12-0e5f-4c81-98e3-55030db76b34
ஈஸ்ட் கோஸ்ட் பார்க் பகுதி கடற்கரையில் இப்படி தேங்கி இருந்த எண்ணெய்ப் படிவுகளுக்குக் காரணம் தெரியவில்லை. படம்: சாவ் பாவ் -

ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கின் ஒரு பகுதியையொட்டி உள்ள கடற்கரையில் காணப்பட்ட எண்ணெய்ப் படிவுகள் அகற்றப்பட்டுவிட்டன. ஈஸ்ட் கோஸ்ட் பார்க் அருகே எண்ணெய் வாடை வருவதாக சென்ற சனிக்கிழமை காலை 8.04 மணிக்குத் தனக்குத் தகவல் கிடைத்தது என்று சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்தது.

உடனடியாக அது பற்றி ஆராய்வதற்குச் சுற்றுக்காவல் கலன் ஒன்றை அங்கு ஆணையம் அனுப்பியது. தூய்மைப்படுத்தும் பணிகளும் தொடங்கின. பணிகள் அன்று முற்பகல் 10.15 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 4 மணி அளவில் முடிவடைந்தன. தண்ணீர் தரம் பழைய நிலைக்குத் திரும்பியது. எண்ணெய்ப் படிவுக்குக் காரணம் தெரியவில்லை என்று ஆணையத்தின் பேச்சாளர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.