தனியார் சொத்து விலை 2வது காலாண்டில் 1.3% அதிகரிப்பு

தனியார் சொத்து விலை 2வது காலாண்டில் 1.3% அதிகரிப்பு

1 mins read

தனியார் சொத்து விலை இந்த ஆண்டின் இரண்டாவது காலாண் டில் 1.3% அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரின் நகரமையத்திலும் நகர விளிம்புப் பகுதிகளிலும் அமைந்துள்ள அடுக்குமாடி வீடு களும் கூட்டுரிமை வீடுகளும் விலை உயர்வு கண்டன.

இதன் காரணமாக தனியார் சொத்து விலை இரண்டாவது காலாண்டில் கூடியதாக நகர மறு சீரமைப்பு வாரியத்தின் பூர்வாங்க மதிப்பிடுகள் தெரிவிக்கின்றன.

இந்த விலைகள், முதல் காலாண்டில் 0.7% குறைந்திருந் தன. ஆண்டு அடிப்படையில் பார்க்கையில் 2வது காலாண்டில் விலைகள் 0.6% அதிகரித்தன.

மூலாதார மத்திய வட்டாரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளின் விலை 1.5% கூடியது. இந்த விலை முதல் காலாண்டில் 3% குறைந்திருந்தது.

மத்திய வட்டாரத்தின் இதர பகுதிகளில் விலைகள் 3% கூடின. முதல் காலாண்டில் இந்த வீடுகளின் விலைகள் 0.7% குறைந்திருந்தன. மத்திய வட் டாரத்திற்கு வெளியே உள்ள தனி யார் வீடுகளின் விலை 0.5% உயர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.