சிங்கப்பூரில் மழைப்பொழிவு அடுத்த வாரத்தில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வறண்ட, வெப்பமான வானிலையே நிலவும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது. இந்த வாரத்தில் மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை சிறிது நேரம் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்றாட வெப்பநிலை குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸுக்கும் 34 டிகிரி செல்சியஸுக்கும் இடைப்பட்டிருக்கும் என்றும் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
பருவ மழையால் ஜூன் மாதம் சிங்கப்பூரில் மழை கூடுதலாகப் பெய்ததாகப் பதிவாகியுள்ளது. மே மாதத்தைக் காட்டிலும் ஜூன் மாதத்தின்போது வெப்பம் குறைந்திருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
'எல் நினோ' பருவநிலைச் சுழலால் இவ்வாண்டின் வெப்பநிலை புதிய உச்சத்திற்குச் செல்லக்கூடும் என்று வானிலை நிபுணர்கள் மார்ச் மாதத்தில் எச்சரித்துள்ளனர்.

