டாக்சி, தனியார் கார்களில் பொருத்தப்பட்டுள்ள உள்நோக்கு கேமராக்கள் மூலம் உள்ளே நடக்கும் காட்சிகளைப் பதிவு செய்ய இரு வாரங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் அதே கேமராக்களில் உரையாடல்களும் பதிவு செய்ய நிலப்போக்குவரத்து ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
கருத்தறியும் பிரிவு நடத்திய ஆய்வில் இத்தகைய ஒளி, ஒலிப் பதிவுக்கு 90 விழுக்காட்டினர் ஆதரவு அளித்துள்ளனர். இதனை சுட்டிக்காட்டிய ஆணையம், உரையாடல்களைப் பதிவு செய்வதால் கட்டணம் தொடர்பான பிரச்சினைகள், வன்முறைச் சம்பவங்களை விசாரிக்க உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டது. இப்புதிய விதிமுறை ஜூலை 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஆனால் காணொளிப் பதிவு வழிகாட்டி விதிமுறைகளிலிருந்து பேருந்துகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளை பலர் பயன் படுத்துவதால் அது பொது இடமாகக் கருதப்படுகிறது. இதனால் பேருந்து ஒலிப்பதிவுக்கு ஏற்றதல்ல என்று ஆணையம் தெரிவித்தது. உள்நோக்கு கேமராக்களைப் பொருத்த ஆணையத்திடமிருந்து முறைப்படி அனுமதி பெறவேண்டும். மேலும் 'ஐவிஷன் பிரைவேட் லிமிடெட்', 'சோலோ பிரைவேட் லிமிடெட்', 'எஸ்எஸ்டிஏ டெக் னாலஜி டெவலப்மெண்ட் பிரை வேட் லிமிடெட்' ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு மட்டும் உள்நோக்கு கேமராக்களைப் பொருத்த அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளது. அனைத்து டாக்சிகளும் தனியார் கார் நிறுவனங்களும் உள்நோக்கு கேமரா பொருத்தப் பட்டுள்ளதைத் தெரிவிக்கும் அடையாளத்தைப் பயணிகளின் பார்வைக்கு வைக்க வேண்டும். டாக்சி நிறுவனங்களும் தங்களுடைய வாடிக்கையாளர் களுக்கு உள்நோக்-கு கேமரா பொருத்தப் பட்டுள்ளதை முன் கூட்டியே தெரிவிப்பது அவசியம்.

