காலணிகளைத் தயாரிக்கும் 'ஸ்கெச்சர்ஸ்' நிறுவனத்தின் தள வாட, சில்லறை விற்பனை பிரிவு களில் ஏறக்குறைய 66 வேலை இடங்கள் காலியாக உள்ளன.
ஆனால் இந்த வேலைகளுக்கு அர்ப்பணிப்புமிக்க ஊழியர்களைத் தேடுவதில் அந்த நிறுவனம் பெரும் சிரமத்தை எதிர்நோக்கு கிறது.
இது குறித்து பேசிய ஸ்கெச்சர்ஸ் விற்பனை, உற்பத்தி பிரிவின் வட்டார இயக்குநரான ஸான் லீ, காலியாக உள்ள வேலை இடங்களை நிரப்ப வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்களின் மூலம் முயற்சிகளை எடுத்தோம். ஆனால் வேலையைக் கைவிடு வோரின் விகிதம் 40 விழுக் காட்டுக்கு மேல் உள்ளது என்று குறிப்பிட்டார்.
வாடிக்கையாளர்கள் அதிக மில்லாத உச்சநேரமில்லாத நேரங் களில் வேலை செய்ய பகுதி நேர ஊழியர்கள் விரும்புகின்றனர்.
ஆனால் மாலை வேளை களிலும் வார இறுதி நாட் களில்தான் பகுதி நேர ஊழியர்கள் தேவைப்படுகின்றனர் என்றார் அவர்.
இந்தச் சூழ்நிலையில் வாழ்க் கைத் தொழில் சோதனைத் திட்டத் தில் பங்கேற்க 'ஸ்கெச்சர்ஸ்' முன் வந்துள்ளது.
நிறுவனங்களும் ஊழியர்களும் மூன்று மாத சோதனை அடிப் படையில் வேலை ஏற்பாடுகளை செய்துகொள்ள இந்தத் திட்டம் உதவுகிறது.
சோதனைக் காலகட்டத்தில் ஒரு மணி நேரத்துக்கு $7.50 முதல் $15 வரை அரசாங்கம் அலவன்ஸ் வழங்குகிறது.
சோதனைக் காலம் முடிந்ததும் ஊழியரும் நிறுவனமும் விரும் பினால் அந்த ஊழியருக்கு நிரந்தர வேலையோ அல்லது குறைந்தது ஓராண்டுக்கு ஒப்பந்த அடிப்படை யிலோ வேலை வழங்கும்.
கடந்த மே 15ஆம் தேதி பகுதி நேர ஊழியர்களுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டதால் இதுவரை குறைந்தது 13 நிறுவனங்கள் இதில் சேர்ந்துள்ளன என்று சிங்கப்பூர் ஊழியர் அணி அமைப்பு நேற்று தெரிவித்தது.
'ஸ்கெச்சர்ஸ்' தவிர மின் னியல், அறைகலன் பொருட்களை விற்கும் 'கோர்ட்ஸ்', தீவு முழுதும் பல்வேறு இடங்களில் உணவகங் களை நடத்தும் ஹான்ஸ், ஒருங் கிணைந்த உல்லாசத்தளமான மரினா பே சேண்ட்ஸ் போன்ற நிறுவனங்களும் புதிய வேலை ஏற்பாட்டில் சேர்ந்துள்ளன.

