ரிபப்ளிக் பலதுறை தொழிற்கல்லூரி கட்டணங்களுக்கு 'பேநவ்'

ரிபப்ளிக் பலதுறை தொழிற்கல்லூரி கட்டணங்களுக்கு 'பேநவ்'

1 mins read

ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் வகுப்புக்கான கட்டணங்களை இனி 'பேநவ்' மூலமாகவும் செலுத்த முடியும். இதன் மூலம் 'பேநவ்' முறையில் வகுப்புக் கட்டணங்களை ஏற்றுக் கொள்ளும் முதல் கல்வி நிலையம் என்ற பெருமையை ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி பெற்றுள்ளது. ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரிக்கும் ஓசிபிசி வங்கிக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட புதிய ஒப்பந்தம் இதற்கு வழி வகை செய்துள்ளது.