துப்புரவாளர்களுக்கு ஊதிய உயர்வு, போனஸ்

துப்புரவாளர்களுக்கு ஊதிய உயர்வு, போனஸ்

2 mins read
88f31f2c-dd65-4cac-8565-56a0784a5632
கோப்புப்படம்: ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் -

தகுதியுடைய உள்ளூர் துப்புர வாளர்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதி போனஸ் வழங்கப்படும். 2020 ஜூலை 1ஆம் தேதியில் இருந்து அவர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு அளிக்கப்படும்.

துப்புரவாளர்களுக்கான முத்தரப்புக் குழுமம் கடந்த ஆண்டு நவம்பரில் அளித்த பரிந்துரைகளை தொழிலாளர் ஆணையர் ஏற்றுக்கொண்டதாக நேற்று அறிவிப்பு வெளியானது.

படிப்படியான சம்பள உயர்வு முறையின் ஒரு பகுதியாக துப்புரவாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவுள்ளது. வெவ்வேறு வேலை நிலைகளுக்கான குறைந்தபட்ச ஊதியத்தையும் திறன் மேம்பாட்டின் அடிப்படையில் ஊதியத்தை உயர்த்தி வழங்கவும் படிப்படியான சம்பள உயர்வு முறை பரிந்துரைக்கிறது.

துப்புரவு, பாதுகாவல், நிலவனப்பு ஆகிய துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு இது பொருந்தும்.

துப்புரவுத் துறை ஊழியர்

களுக்கு ஊதியத்தை உயர்த்தி, அந்த ஊழியர்கள் தங்களின் திறன்களை வளர்த்துக்கொள்ள ஊக்குவிக்கும் தேசிய அளவிலான முயற்சியின் ஓர் அங்க

மாக, துப்புரவாளர்களுக்கு போனஸ் வழங்கவேண்டும் என்று கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் துப்புரவாளர்

களுக்கான முத்தரப்புக் குழுமம் முதன்முறையாக வலியுறுத்தியது.

ஊதிய உயர்வு, போனஸ் தொடர்பான நேற்றைய அறிவிப்பின்மூலம் கிட்டத்தட்ட 1,300 நிறுவனங்களில் பணிபுரியும் 40,000க்கும் மேற்பட்ட துப்புர வாளர்கள் பலனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

2020 ஜனவரி 1ஆம் தேதி முதல் போனஸ் வழங்கும் முறை நடப்புக்கு வரும். இதற்குத்

தகுதிபெற, சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தவாசிகளாக இருக்கும் துப்புரவாளர்கள் ஒரே நிறுவனத்தில் குறைந்தது 12 மாதங்

களுக்குத் தொடர்ச்சியாகப் பணியாற்றி இருக்கவேண்டும். அத்துடன், கடந்த ஆண்டில் வேறு எந்த வகையிலும் குறைந்தபட்சம் இரண்டு வார ஊதியத்தை அவர்கள் போனசாகப் பெற்றிருக்கக்கூடாது.

அடுத்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் அவர்களுக்கு 3% வருடாந்திர ஊதிய உயர்வு அளிக்கப்படும். உரிமம் பெற்ற துப்புரவு நிறுவனங்களில் பணிபுரியும் உள்ளூர் துப்புரவாளர்கள் அனைவரும் அந்த ஊதிய உயர்வுக்குத் தகுதிபெறுவர்.