துண்டு திருடிய 'கிராப்ஃபூட்' ஊழியர்

துண்டு திருடிய 'கிராப்ஃபூட்' ஊழியர்

1 mins read
122a0134-1c85-4c73-bf0c-7c2e688661f5
யுடியுப்பில் காணொளியில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள். -

'கிராப்ஃபூட்' நிறுவனத்திற்காக உணவு விநியோகம் செய்யும் ஆடவர் வீட்டின் வெளியே காய வைக்கப்பட்டிருந்த துண்டை எடுக்கும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. 'கிராப்ஃபூட்'டின் பச்சை நிற சட்டை அணிந்த அந்த ஆடவர் தாழ்வாரத்தில் நடந்து செல்வதையும் பின்னர் ஒரு வீட்டுக்கு வெளியே காய வைக்கப்பட்டிருந்த நீல நிறத் துண்டை எடுப்பதையும் காணொளி சித்திரித்தது. சம்பவம் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் நடந்ததாக நம்பப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்திருப்பதாகவும் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் 'கிராப்' பேச்சாளர் தெரிவித்தார். நிறுவனம் இத்தகைய நடத்தையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த ஆடவருக்கு விநியோகம் செய்யத் தடை விதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வீட்டுக்கு வெளியே காய வைக்கப்பட்ட துண்டை 'கிராப்ஃபூட்' சட்டை அணிந்த நபர் எடுக்கும் காட்சி. படம்: இணையம்