உயர்மாடியிலிருந்து பெண்ணைத் தூக்கி வீசி எறிந்தவருக்கு ஆயுள் தண்டனை

உயர்மாடியிலிருந்து பெண்ணைத் தூக்கி வீசி எறிந்தவருக்கு ஆயுள் தண்டனை

1 mins read
90b25672-c268-4f94-9e6b-7d5ae4e37312
-

கடும் வாக்குவாதத்திற்குப் பின், அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தில் ஒரு பெண்ணைக் கட்டைச்சுவருக்கு அப்பால் தூக்கி வீசிய 28 வயது ஆடவருக்குக் கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

தோ பாயோ லோரோங் 2லுள்ள வாகன நிறுத்துமிடத்தின் ஐந்தாவது மாடியில் 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்தது. 23 வயது அட்டிகா டோல்கிஃப்லிக்கு மரணம் விளைவிக்கக்கூடிய காயத்தை சையது மஃபி ஹசான் வேண்டுமென்றே ஏற்படுத்தினார் என்று நீதிமன்றம் இவ்வாண்டு மே மாதம் தீர்ப்பளித்தது.

2013ஆம் ஆண்டில் இருவரும் ஃபேஸ்புக் வழி அறிமுகமானதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வேலையில்லாமல் இருந்த சையது மஃபிக்குக் குமாரி அட்டிகா தனது கைப்பேசியை இரவலாகக் கொடுத்தார். அந்தக் கைபேசியின் பழுதைச் சரிசெய்ய சையது 125 வெள்ளியைச் செலவிட்டபோதும் அந்தப் பெண்ணிடம் 300 வெள்ளி கேட்டார். அட்டிகாவை மீண்டும் மீண்டும் சந்தித்துத் தொல்லை கொடுக்க முயன்றார் சையது.

2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி சையதைச் சந்திக்க அட்டிகா ஒப்புக்கொண்டார். அப்போது இருவருக்கும் இடையே கைப்பேசி பழுதுபார்ப்பு தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சையது இவ்வாறு செய்தார்.