கனரக வாகன பேருந்து நிறுத்துமிடத்தில் தீப்பற்றிய பேருந்து

கனரக வாகன பேருந்து நிறுத்துமிடத்தில் தீப்பற்றிய பேருந்து

1 mins read
46bd0078-e93b-4cf4-82be-7e4aa92fcc99
-

ஜூரோங் வெஸ்டிலுள்ள கனரக வாகன பேருந்து நிறுத்துமிடத்தில் தனியார் பேருந்து ஒன்று வியாழக்கிழமை காலை தீப்பற்றியது.

காலை சுமார் 9.30 மணிக்கு ஜாலான் பஹார் கனரக வாகன நிறுத்துமிடத்தில் தீ மூண்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. சற்று நேரத்தில் தீ அணைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் எவரும் காயமடைந்ததாகத் தகவல் வெளிவரவில்லை.

சம்பவத்திற்கான காரணத்தைச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை ஆராய்கிறது.