அனைத்துலக பணநிதியத்தின் தற்போதைய தலைவர் கிறிஸ்டின் லகார்ட் ஐரோப்பிய மத்திய வங்கி யின் அடுத்த தலைவராகப் பொறுப்பேற்கவிருக்கும் வேளையில், அவர் விட்டுச் செல்லும் பதவிக்கு யார் வரவிருக்கிறார் என்ற கேள்வியும் பணநிதியத்தின் பாரம்பரியத்தைக் கடந்து அமெரிக்கா ஒரு அமெரிக்கரை அப்பதவிக்கு நிறுத்துமா என்ற கேள்வியும் அங்கு நிலவிக்கொண்டிருக்கின் றன.
அனைத்துலக பணநிதியத்தின் தலைமைப் பொறுப்பு பாரம்பரியமாக ஐரோப்பியர் ஒருவருக்குத் தான் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், உலகப் பொருளியலில் ஆசியாவின் பங்களிப்பு அதிகமாகி வருவதால் அந்த வட்டாரத் தின் தலைவர்களும் இந்தப் பதவிக்குப் பரிந்துரைக்கப்படலாம் என்று சில யோசனைகள் முன்வைக்கப்பட்டன.
அந்த வகையில் அனைத்துலக நாணய மற்றும் நிதிக் குழுவின் தலைவராக உள்ள சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், அனைத்துலக பணநிதியத் தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் திரு அகஸ்டின் கார்ஸ்டன்ஸ், பிம்கோ எனும் உலகளாவிய முதலீட்டு நிர்வாக நிதி நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி திரு முகம்மது எல்-எரியன் ஆகியோ ரின் பெயர்கள் அனைத்துலக பணநிதியத்தின் தலைமைப் பொறுப்புக்குப் பேசப்படுகின்றன.
ஐரோப்பிய அதிகாரிகள் திருவாட்டி லகார்ட்டை ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைமைப் பொறுப்புக்கு நியமித்துள்ளனர். தற்போது அந்தப் பதவியை வகிப்பவர் திரு மரியோ ட்ராகி.
"வர்த்தகப் பதற்றத்தாலும் புவிஅரசியல் கூட்டணிகள் மாறி வருவதாலும் உலகில் பன்முகத் தன்மை குறைந்து வரும் சூழ்நிலை யில் தனது இணக்கம், செல்வாக்கு, சட்டபூர்வமானநிலை ஆகியவற்றை நிலைநாட்டுவது அனைத்துலக பணநிதியத்தின் அடுத்த தலைவரின் சவாலாக இருக்கும்," என்றார் அனைத்துலக பணநிதியத்தின் சீனப் பிரிவின் முன்னாள் தலைவர் திரு ஈஸ்வர் பிரசாத்.
அனைத்துலக பணநிதியத்தின் 24 பேர் கொண்ட குழு அதன் நிர்வாக இயக்குநரையும் இதர பதவிகளையும் ஒருமனதாகத் தேர்வு செய்யும். கடந்த முறை திருவாட்டி லகார்ட் ஆறு வாரத் தேர்வு முறைக்குப் பின் அந்தப் பதவிக்கு உறுதி செய்யப்பட்டார்.
திரு தர்மன், திரு கார்ஸ்டன்ஸ், திரு எல்-எரியன் ஆகியோரைத் தவிர இங்கிலாந்து வங்கியின் முன்னாள் ஆளுநர் திரு மார்க் கார்னியின் பெயரும் அனைத்துலக பணநிதியத்தின் தலைமைப் பத விக்குப் பேசப்படுகிறது.
ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகிக்கொள்ளும் ஆயத்தவேலைகள் நடந்து கொண்டிருப்பதால், பிரிட்டிஷ் குடிமகனான திரு கார்னி அந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது என் றார் ஆசிய பசிபிக் திட்டத்தின் இணை ஆய்வாளர் திரு வாசுகி சாஸ்திரி.

