'அல்சைமர்ஸ்' எனும் நினைவாற்றல் இழப்பு நோய் சங்கத் துக்கு சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட 'முசிம்மாஸ்' எனும் பனை எண்ணெய் நிறுவனம் நேற்று ஒரு மில்லியன் வெள்ளியை நன்கொடையாக வழங்கியுள்ளது.
அந்த நன்கொடை ஒரு நாளைக்கு $72 செலவாகும் சங்கத்தின் பகல் பராமரிப்புக் கட்டணத்தைச் செலுத்த சிரமப்படும் 300 வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவியாக இருக்கும். ஒவ்வொரு குடும்பத்தின் நிதி நிலை மையை அரசாங்கம் சோதித்த பிறகு, அவர்களுக்கான உதவித் தொகை நிர்ணயிக்கப்படும்.
தற்போது சிங்கப்பூரில் 82,000 பேர் 'டிமென்ஷியா' எனும் முதுமைக்கால ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் வரும் 2030ஆம் ஆண்டுக்குள் அந்த எண்ணிக்கை 100,000ஐத் தாண்டக்கூடும் என்று சங்கம் தெரிவித்தது.

