'அசுத்தமான, ஏற்றுக்கொள்ளமுடியாத நிலையில் ஊழியர் தங்குவிடுதி'

'அசுத்தமான, ஏற்றுக்கொள்ளமுடியாத நிலையில் ஊழியர் தங்குவிடுதி'

2 mins read
b3f2cebd-503f-4d29-a366-a5438e14672d
( படம்: த நியூ பேப்பர் ) -

ஊழியர் தங்குவிடுதி ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையின்போது அந்த விடுதி அசுத்தமான நிலையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத நிலையிலும் இருந்ததால் அதன் இயக்குநர் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையானார். அந்த விடுதியின் அறைகளில் கழிவறைத் தொட்டிகள் உடைந்திருந்தன; அறைகளில் கரப்பான் பூச்சிகள் தென்பட்டன.

அவ்விடுதியின் இயக்குநரான 42 வயது பர்விஸ் அகமது முகம்மது கவுஸ் எனும் சிங்கப்பூரரும் அவரது லேபர்டெல் மேனேஜ்மண்ட் கார்ப்பரேஷன் நிறுவனமும், வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகள் சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவர். 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கும் இவ்வாண்டு ஜனவரி மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் உரிமம் தொடர்பான விதிமுறைகளுக்கு ஏற்ப அவர்கள் நடந்துகொள்ளவில்லை என்பதும் குற்றச்சாட்டில் அடங்கும்.

எம்இஎஸ் குழுமத்தின் கீழ் செயல்படும் லேபர்டெல் நிறுவனம், தனது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஊழியர் தங்குவிடுதியின் தூய்மையை உறுதி செய்ய தவறிவிட்டது என்றும் அதன் இயக்குநர் பர்விஸ் இதில் கவனக்குறைவாக இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகள் சட்டத்தின்கீழ் லேபர் டெல் நிறுவனம் பத்து குற்றச்சாட்டு களையும் திரு பர்விஸ் ஆறு குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்குகின்றனர். தூய்மைக்கேடுகள் உள்ள ஜூரோங் பெஞ்சுரு ஊழியர் தங்கு விடுதிகள் 1, 2ஆம் வெஸ்ட் கோஸ்ட் ரோட்டுக்கு அருகில் பெஞ்சுரு பிளேசில் அமைந்துள்ளன.

"நாங்கள் நடத்திய சோதனைகளில் அந்த ஊழியர் தங்குவிடுதி

யின் பராமரிப்பு நிலை மோசமாக இருந்தது தெரியவந்தது. உதாரணத்துக்கு, அங்கு சில இடங்களில் விளக்குகள் இல்லை அல்லது விளக்குகள் உடைந்திருந்தன, குளியலறைத் தண்ணீர் குழாய்கள் வேலை செய்யவில்லை, படிக்கட்டுகளும் படிக்கட்டுக் கைப்பிடிகளும் பழுதாகியிருந்தன.

"ஊழியர் அறைகள் அசுத்தமாக, ஏற்றுக்கொள்ளமுடியாததாக இருந்தன. அங்கு கரப்பான்பூச்சிகள் தென்பட்டன," என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.

'ஜூரோங் பெஞ்ஜுரு 2' தங்கு விடுதியில் உள்ள சில குப்பைத் தொட்டிகளுக்கு மூடிகள் இல்லை, சில கழிவறைகளுக்குக் கதவுகள் இல்லை. புளு ஸ்டார்ஸ் தங்கு விடுதியில் அடுப்புகளும் தட்டுகள் கழுவும் தொட்டிகளும் உடைந்திருந்தன என்றும் நீதிமன்ற ஆவ ணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், லேபர்டெல் நிறுவனத்துக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் $50,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். அதன் இயக்குநர் பர்விஸின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஓராண்டு வரையிலான சிறை மற்றும் $50,000 வரையிலான அபராதம் விதிக்கப்படலாம் என்று சட்ட ஆவணங்கள் கூறுகின்றன.