தோ பாயோ கொலை: ஆடவருக்கு ஆயுள்தண்டனை

1 mins read

கைபேசியை இரவல் வாங்கியதன் தொடர்பில் தொடங்கிய வாக்குவாதத்தின் விளைவாக அடுக்கு மாடி நிறுத்தத்திலிருந்து 23 வயது பகுதிநேர உபசரிப்பு ஊழியரைத் தூக்கி வீசிய 28 வயது சையது மஃபி ஹசானுக்கு நேற்று ஆயுள் தண்டனையுடன் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி இரவு, தோ பாயோ லோரோங் 2ல் உள்ள அடுக்குமாடி கார் நிறுத்தத்தின் 5ஆம் தளத்தில் நடந்த வாக்குவாதத்தில் சையது அட்டிக்காவைத் தூக்கி அங்கி ருந்து கீழே வீசினார்.

2013ஆம் ஆண்டில் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகிய இருவரும் மீண்டும் 2015 ஏப்ரலில் இணைந் தனர்.

வேலையில்லாத சையது அட் டிக்காவின் மற்றொரு கைபேசியை இரவல் வாங்கினார். அதன் தொடர்பில் பல வாக்குவாதங்கள் நடைபெற்றன. சம்பவம் நடந்த அன்று சையது, அட்டிக்காவை அங்கு வரச்சொன்னார். பின்னர் கைகலப்பில் காயமுற்ற அட்டிக் காவை சையது, 5வது தளத்தி லிருந்து தூக்கி வீசினார்.