'ஸ்பைஸ்' உணவு, பான நிறுவனத்திற்கு $20,000 அபராதம்

'ஸ்பைஸ்' உணவு, பான நிறுவனத்திற்கு $20,000 அபராதம்

1 mins read

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களைத் தனது இணையத்­தளத்தில் வெளியிட்டதற்காக உணவு, பான நிறுவனமான 'ஸ்பைஸ் கான்செப்ட்ஸ்'க்கு $20,000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

மொத்தம் 148 வாடிக்கையாளர்­களின் பெயர்கள், தொடர்பு எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், குடியிருப்பு முகவரிகள் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி அந்நிறுவனத்தின் இணையத்­தளத்தில் வெளியிடப்பட்டன.

வாடிக்கையாளர்களின் தகவல் கசிவு குறித்து 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி தனிநபர் தரவு பாதுகாப்பு ஆணையத்திற்கு புகார் கிடைத்தது.

தகவல் கசிவு குறித்து இரு நாட்கள் கழித்து 'ஸ்பைஸ்' நிறுவ­னத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும்படி தனது மென்பொருள் வழங்குநரான 'நொவாடின்' நிறுவ­னத்தை அது கேட்டுக்­­கொண்­ டது.