துப்பாக்கிப் பாகங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பொட்டலம் ஒன்று கண்டறியப்பட்டதாக குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையம் (ஐசிஏ) நேற்று தெரிவித்தது.
ஏர்மெயில் டிரான்சிட் நிலையத்தில் கடந்த மாதம் 29ஆம் தேதி கிடைத்த பொட்டலம் ஒன்று தொடர்பாக பதிவாகி இருந்த படங்களில் முரண்பாடு இருந்ததை அதிகாரி ஒருவர் கண்டறிந்ததாக ஆணையம் நேற்று வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிட்டது.
அந்தப் பொட்டலத்தில் மொத்தம் 20 துப்பாக்கிப் பாகங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அவை விற்பனைப் பொருட்கள் என்று கூறப்பட்டு இருந்தன. இந்த விவகாரம் குறித்து போலிஸ் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஆணையம் கூறியது.

