சித்திரவதையிலிருந்து காப்பாற்றப்பட்ட தெரு விலங்குகளுக்கான புதிய விலங்குநல மருந்தகம் ஒன்றை விலங்குவதை தடுப்புச் சங்கம் நேற்று அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தது.
சுவா சூ காங் அருகே சுங்கை தெங்கா ரோட்டில் அமைந்துள்ள லாப நோக்கமற்ற இந்த மருந்தகம், அதிநவீன மருத்துவப் பரிசோதனை முறையைக் கொண்டுள்ளது. உதாரணத்திற்கு அது கதிரியக்க, ரத்தப் பரிசோதனை இயந்திரங்களைக் கொண்டுள்ளது.
அந்த மருந்தகம் ஏற்கெனவே உட்லே அருகே மவுண்ட் வெர்னன் பகுதியில் அமைந்திருந்தது.
ஏறத்தாழ $300,000 பொருள் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த மருந்தகம் கடந்த ஆண்டு அக்டோபரில் செயல்படத் தொடங் கியது.
முன்பைவிட இப்போது 20 விழுக்காடு கூடுலான அறுவை சிகிச்சைகளை அதனால் மேற்கொள்ள முடிகிறது.
தற்போது மாதம் ஒன்றுக்கு 80 அறுவை சிகிச்சைகள், 50 ரத்தப் பரிசோதனைகள் ஆகியவற்றுடன் 100 கதிரியக்க சோதனைகளையும் மேற்கொள்வதாகச் சங்கம் கூறி யது.
அத்துடன், ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 20 விலங்குகள் சிகிச்சை பெறுகின்றன என்றும் சங்கம் விளக்கியது.

