மதுபோதையில் காரோட்டினார் என்ற சந்தேகத்தின் பேரில் 44 வயது ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். நேற்று காலை அவரது கார் பொங்கோல் சென்ட்ரலை நோக்கிச் செல்லும் பாசிர் ரிஸ் டிரைவ் 1 சாலையின் நடுப்பகுதிச் சுவரில் மோதி தீப்பிடித்துக் கொண்டது. அதில் எவருக்கும் காயமில்லை. கார் தீப்பிடித்து எரியும் படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. விபத்து குறித்து போலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மதுபோதையில் காரோட்டிய சந்தேகத்தின் பேரில் ஆடவர் கைது
1 mins read
படம்: SGROADBLOCKS/TELEGRAM -

