நன்கொடை பிரியாணி மூலம் சமூக ஒற்றுமை பிரதிபலிப்பு

நன்கொடை பிரியாணி மூலம் சமூக ஒற்றுமை பிரதிபலிப்பு

2 mins read
b50dde13-7459-4d82-9bde-141dfaf0d801
அதிபர் சவால் நன்கொடை பிரியாணி நிகழ்ச் சிக்கு வந்திருந்த ஸ்ரீ நாராயண மிஷன் முதியோர் இல்லத்தின் விருந்தினர்களுக்கு பிரியாணியைப் பரிமாறுகிறார் அதிபர் ஹலிமா யாக்கோப் (நடுவில்). வலக்கோடியில் இருப்பவர் ஸ்ரீ நாராயண மிஷன் முதியோர் இல்லத்தின் தலைமை நிர்வாகி திரு எஸ். தேவேந்திரன். படம்: முயிஸ் -

சிங்கப்பூரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களின் ஒருங்கி ணைந்த வருடாந்திர முயற்சிகளின் பிரதிபலிப்பாக அதிபர் சவால் நன் கொடை பிரியாணி நிகழ்ச்சி உரு வெடுத்துள்ளது.

அதன் தொடர்பில் ஜூ சியாட் டில் உள்ள காலிட் பள்ளிவாசலில் நேற்று நடைபெற்ற இவ்வாண்டின் அதிபர் சவால் நன்கொடை பிரி யாணி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந் தினராக வந்திருந்த அதிபர் ஹலிமா யாக்கோப்பும் அவரது கணவர் திரு முகம்மது அப்துல்லா அல்ஹப்‌ஷியும் பிரியாணி கிண்டி னார்கள்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுப்புற, நீர்வள அமைச்சரும் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான மச கோஸ் ஸுல்கிஃப்லியும் கலந்து கொண்டார்.

பள்ளிவாசல் குழுமமும் ரஹ்மத் தான் லில் அலாமின் அறநிறுவனமும் தத்தெடுத்திருக்கும் ஸ்ரீ நாராயண மிஷன் முதியோர் இல்லம், ஜாமியா சிங்கப்பூர் ஆகியவற்றின் 20 விருந்தினர்கள் காலிட் பள்ளிவாசலுக்கு அழைக் கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு அதிபர் ஹலிமாவும் திரு அல்ஹப்‌ஷியும் பிரியாணி பரிமாறினார்கள்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மசகோஸ், "சிங் கப்பூர் முஸ்லிம்களின் உன்னத மான ஒருங்கிணைந்த முயற்சியான அதிபர் சவால் நன்கொடை பிரி யாணி நிகழ்ச்சி 2000ஆம் ஆண் டில் தொடங்கியதிலிருந்து இது வரை $2.3 மில்லியனை நன் கொடையாக வழங்கியுள்ளது," என்று தெரிவித்தார்.

"முஸ்லிம் சமூகத்தின் அடை யாளமாக உருவெடுத்திருக்கும் இந்நிகழ்ச்சி ஓர் அற்புதமான முயற்சி. உதவி தேவைப்படுவோர் எங்கிருந்து வந்தவர்கள், எந்த மொழியைப் பேசுகிறார்கள் போன்ற பாகுபாடு இல்லாமல், அவர்களுக்கு உதவுவதையே சிங்கப்பூர் முஸ் லிம்கள் விரும்புகிறார்கள்.

"நாம் தொடர்ந்து ஒற்றுமையுடன் வாழ்வதற்கு இதுபோன்ற பண்புகளை நாம் கட்டிக்காக்க வேண்டும்," என்றும் அமைச்சர் மசகோஸ் கூறினார்.

அதிபர் சவால் 2019 நிகழ்ச் சிக்கு பொது மக்களும் உதவலாம். நேற்று முதல் எல்லா பள்ளிவாசல் களிலும் ஒரு பிரியாணி பொட்டலத் துக்கு $10 என்ற விலையில் முன் பதிவு செய்துகொள்ளலாம்.

பிரியாணி பொட்டலங்களை ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று காலிட் பள்ளிவாசலில் பெற்றுக்கொள்ளலாம்.

சிங்கப்பூரிலுள்ள 70 பள்ளி வாசல்களில் ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெறும் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகும் பிரியாணி பொட்டலங்களைப் பெற்றுக்கொள் ளலாம் என்றும் கூறப்பட்டது.