ஆளில்லா வானூர்திகளுக்கு கட்டாய பதிவு முறை

ஆளில்லா வானூர்திகளுக்கு கட்டாய பதிவு முறை

2 mins read

அனைத்து ஆளில்லா வானூர்தி களுக்கும் கட்டாய பதிவு முறையை அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் விதிமுறைகளை மீறிய வானூர்தியை இயக்குவோருக்கு தண்டனையை அதிகரிக்கவும் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

கடந்த மாதம் சாங்கி விமான நிலைய ஆகாயவெளியில் இரு முறை சட்டவிரோதமாக ஆளில்லா வானூர்திகள் பறக்கவிடப்பட்டதால் பல விமான சேவைகள் தடைப்பட் டன.

இதன் காரணமாக ஆளில்லா வானூர்திகள் தொடர்பான விதி முறைகளை அரசு கடுமையாக்கி உள்ளது.

ஆளில்லா வானூர்திகளை இயக்குவோருக்கு உரிமம் வழங் கும் கட்டமைப்பும் இன்னும் ஆற் றல்மிக்க ஆளில்லா வானூர்தி

களை அறிமுகப்படுத்தவும் அர சாங்கம் திட்டமிட்டுள்ளது என்று நேற்று நாடாளுமன்றத்தில் கூறிய போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின், இந்தப் புதிய நடவடிக்கைகள் எப்போது நடப்புக்கு வரும் என்று தெரிவிக்க வில்லை.

வானூர்திகளின் பதிவு முறை யால், அதனை இயக்குவோருக்கு தங்களின் பொறுப்புகளும் வானூர்தி தொடர்பான நடவடிக்கை களை விதிமுறைகளுக்கு உட்பட்டு பயன்படுத்துவதும் உறுதியாகத் தெரிய வரும் என்றும் அமைச்சர் சொன்னார்.

விதிகளை மீறுவோருக்கு எதி ராகக் கடுமையான அமலாக்க நட வடிக்கைகள் எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட டாக்டர் லாம், தற் போது முறையான அனுமதி இல் லாமல் சிங்கப்பூரில் விமான நிலை யங்கள் அல்லது ஆகாயப்படை தளங்களுக்கு ஐந்து கிலோ மீட்ட ருக்கு உட்பட்டும் 61 மீட்டர் மேற் போகாத உயரத்திற்குள்ளும் வானூர்திகளைப் பறக்க விடுதவ தற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறுவோருக்கு $20,000 வரை அபராதமும் ஓராண்டு வரையிலான சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.

கடந்த மாதம் 18ஆம், 24ஆம் தேதிகளில் அனுமதியின்றி சாங்கி ஆகாயவெளியில் ஆளில்லா வானூர்திகள் பறந்ததன் விளை வாக 55 விமான சேவைகள் தாமத மாயின; எட்டு சேவைகள் மாற்றி விடப்பட்டன. இதன் தொடர்பில் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.

இச்சம்பவங்கள் தொடர்பில் போலிஸ் விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது என்றும் டாக்டர் லாம் விவரித்தார்.

"மற்ற நாட்டு விமான நிலையங் களில் நிகழ்ந்த ஆளில்லா வானூர்திகள் ஊடுறுவல் அனுப வங்களிலிருந்து நாம் படிப்பினை களைப் பெற்றுள்ளோம். சட்டவிரோ தமாக அவற்றைப் பறக்கவிட்டவர் களை அடையாளம் காண்பது சவாலான காரியம். இதற்கிடையே, வானூர்திகளைக் கண்காணித்து அவை ஆகாயவெளியைப் பாதிக் காத வண்ணம் பார்த்துக் கொள்வதை முன்னுரிமையாகக் கொண்டுள்ளோம்.

"சாங்கி விமான நிலைய செயல்முறைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய பன்முறை அணுகு முறையை எடுத்துள்ளோம். தேவை ஏற்பட்டால் அந்தப் பணிகளுக்குக் கூடுதல் வளங்களை வழங்கவும் தயாராக இருக்கிறோம்," என்றார் அமைச்சர்.