500 கட்டடங்களில் தீ பாதுகாப்பு அம்சங்கள் தேவை

500 கட்டடங்களில் தீ பாதுகாப்பு அம்சங்கள் தேவை

2 mins read

பழைய கட்டடங்களிலும் மக்கள் புழங்கும் கட்டடங்களிலும் தீச் சம்பவம் நிகழுமாயின் அது பெரும் ஆபத்தாக அமைந்துவிடும் என் பதால், ஆகக் கடைசி தீ குறி யீட்டின்படி அந்தக் கட்டடங்களில் முக்கியமான தீ பாதுகாப்பு அம் சங்கள் பொருத்தப்பட வேண்டும் என்று நேற்று நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்புக்குத் தாக்கல் செய் யப்பட்ட தீ பாதுகாப்பு திருத்த மசோதா கேட்டுக்கொள்கிறது.

இதுவரை இப்படிப்பட்ட தீ பாதுகாப்பு அம்சங்களை சுமார் 500 கட்டடங்களில் பொருத்த வேண்டும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

1991/2002 தீ குறியீடு வெளி யிடப்படுவதற்கு முன் கட்டப்பட்ட கட்டடங்கள், அதை அதிகமா னோர் பயன்படுத்துவது, அதன் பயனாளர்களின் விவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் புதிய அம்சங்கள் தேவைப்படுமா என்று நிர்ணயிக்கப்படும்.

உதாரணத்துக்கு, ஆன்சன் ரோட்டில் உள்ள இன்டர்நேஷனல் பிளாசா கட்டடம் 1976ல் கட் டப்பட்டதற்குப் பிறகு அது எவ்வித பெரும் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவில்லை.

இந்த உயர்மாடிக் கட்டடம் 1974 தீ குறியீட்டைப் பின்பற்றி வந்தாலும், வெளிப்புறத்துக்கு இட் டுச்செல்லும் அவசரமாக வெளி யேறும் படிக்கட்டுகளைக் கொண்டி ருக்கவில்லை. இது இருந்தால் தீ தொடர்பான அவசரநிலை நிகழும் போது எளிதில் வெளியேறி விட லாம் என்று தெரிவிக்கப்பட்டது.

கட்டட உரிமையாளர்கள் தீக் குறியீட்டின் தகுதிகளைப் பெற வழிவகுக்கும் முயற்சியாக சிங்கப் பூர் குடிமைத் தற்காப்புப் படை நீக்குப்போக்கான முறையில் அவர் களுடன் இணைந்து பணியாற்றும்.

அப்படி என்றால், கட்டட உரி மையாளர்கள் கட்டடத்துக்குத் தேவைப்படும் தகுதிகளுக்குத் தயார் செய்ய அவர்களுக்குக் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட லாம்.

மசோதாவில் கொண்டு வரப் படும் திருத்தங்களில் மற்றொன்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் நடப்பில் உள்ள அம லாக்க மற்றும் புலனாய்வு நடவ டிக்கை முறைக்கு அதிக அதிகாரம் வழங்குதல் என்றும் தெரிவிக்கப் பட்டது.