சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, சிங்கப்பூர் போலிஸ் படை ஆகியவற்றின் ஓய்வுபெற்ற அதிகாரிகளும் நடப்பு துணை போலிஸ் படை அதிகாரிகளும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்காக தீ பாதுகாப்புச் சோதனைகளை மேற்கொள்வதில் பங்களிக்கக்கூடும். எதிர்காலத்தில் அவர் களுக்கு அமலாக்க அதிகாரங்களும் அளிக்கப்படலாம் என்று நேற்று நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்புக்குத் தாக்கல் செய்யப்பட்ட தீ பாதுகாப்பு திருத்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய திட்டத்தால் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தனது வளங்களை விடுவித்து இன்னும் அதிக அபாயங்கள் உள்ள பகுதிகளில் கவனம் செலுத்தலாம் என் றும் கூறப்பட்டது.
உள்துறை அமைச்சு அளித்த தகவலின்படி, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஓர் ஆண்டுக்கு 10,000 தீ பாதுகாப்புச் சோதனைகளை மேற்கொள்கின்றன. இதில் மூன்றாம் தரப்பினரின் பங்களிப்பு சேர்த்துக்கொள்ளப்பட் டால், அந்த எண்ணிக்கையிலிருந்து கிட்டத்தட்ட 4,500 திடீர் சோதனைகளை மூன்றாம் தரப்பினர் மேற்கொள்ள இயலும் என்றும் விளக்கப்பட்டது.

