அதிகரிக்கும் கட்டணக் கழிவுகளை ஈடுகட்ட கட்டண உயர்வு தேவைப்படலாம்

அதிகரிக்கும் கட்டணக் கழிவுகளை ஈடுகட்ட கட்டண உயர்வு தேவைப்படலாம்

1 mins read

பொதுப் போக்குவரத்து செயல்பாட்டுச் செலவுகளில் 30 விழுக்காட்டுக்கும் மேல் அரசாங்கம் ஈடுகட்டி வருவதால், கட்டணக் கழிவுகளைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள கட்டண உயர்வுகள் தேவைப்படலாம் என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் கோடிகாட்டியுள்ளார்.

"2016க்கும் 2017க்கும் இடைப்பட்ட காலத்தில் ரயில் கட் டமைப்பை வழிநடத்தும் செலவுகள் அதிகரித்து கிட்டத்தட்ட $270 மில்லியனை எட்டியது. பயணிகள் செலுத்தும் கட்ட ணங்கள் நடைமுறைச் செலவுகளுக்குப் பயன்படுத்தப்படாது என்பதால், ரயில் நிறுவனங்கள் இழப்பில் ரயில்களை இயக்குகின்றன. ஆகக் கடைசி நிதியாண்டில், எஸ்எம்ஆர்டி ரயில்கள் $86 மில்லியன் இழப்பைச் சந்தித்தன. எஸ்பிஎஸ் டிரான்சிட் ரயில் பிரிவும் பத்து மில்லியனுக்கு மேற்பட்ட வெள்ளியை இழந்துள்ளது," என்று திரு கோ நாடாளுமன் றத்தில் விளக்கினார்.

தற்போதைய ரயில் நம்பகத்தன்மை பற்றி பொத்தோங் பாசிர் தொகுதி உறுப்பினர் சீத்தோ யீப்பின் கேட்ட கேள் விக்கு அமைச்சர் பதிலளித்தார். ரயில் நம்பகத்தன்மையை அதிகரிக்க எடுக்கப்பட்ட ஆண்டு முழுமைக்குமான முயற்சிகளால்தால் செலவுகள் அதிகரித்துள்ளன என்றார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரசாங்கம் நடைமுறைக் கட்டணக் கழிவுகளுக்காக $4.5 பில்லியனைச் செலவழிக் கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் இது புதிய ரயில் பாதைகளைக் கட்ட அரசாங்கம் செலவழிக்கும் $25 பில்லிய னுக்கு மேற்பட்டது என்றும் அமைச்சர் விளக்கினார்.