நிர்வாணமாக ஓடித் திரிந்த விமானப் பணியாளர்கள்

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானச்சேவை நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் மூவர் சிங்கப்பூரிலுள்ள ஒரு ஹோட்டலில் நிர்வாணமாக ஓடித் திரிந்ததை  அடுத்து அவர்கள் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

சிங்கப்பூருக்கு வந்திருந்தபோது அளவுக்கு அதிகமாக மதுபானம் குடித்த அந்த இரண்டு ஆடவர்களும் ஒரு பெண்ணும் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று ‘த சன்’ பிரிட்டிஷ் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.  ஹெத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சிங்கப்பூரில் தரையிறங்கிய விமானப் பணியாளர்கள், விமானத்திற்குள் இருந்த மதுபானத்தைத் திருட்டுத்தனமாக எடுத்துக்கொண்டு அவர்களுக்கான ஹோட்டலுக்குக் கொண்டு சென்றதாக ‘த சன்’ கட்டுரை குறிப்பிட்டது. அவர்கள் குடித்துவிட்டு பல்வேறு விளையாட்டுகளை விளையாடியபோது இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்தச் சம்பவம் எந்த ஹோட்டலில் நடந்தது என்பது தெளிவாக இல்லை.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பொங்கோலில் முதன்முதலாகக் கட்டப்படவுள்ள அறிவார்ந்த வீவக வீடுகளின் தோற்றம். படம்: வீடமைப்பு வளர்ச்சிக் கழகம்

24 Jul 2019

அறிவார்ந்த வீவக வீடுகள்

காணொளியில் காணப்பட்ட முகம்மது ஃபாரிட் முகம்மது சாலேவும் (இடது) முகம்மது நூர் ஃபத்வா மஹ்மூட்டும். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

24 Jul 2019

கார்ப்பரல் கோக் கிணற்றில் தள்ளப்பட்ட சம்பவம்: தொடரும் விசாரணை