பொது இடத்தில் கீழாடையைக் கழற்றிய ஆடவர் கைது

கிளார்க் கீ வட்டாரத்தில் தனது கீழாடையைக் கழற்றி பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆடவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அதே நாளில் ஃபுல்லர்டன் சதுக்கத்தில் வேறொரு பெண்ணை இதே போல தொந்தரவு செய்ததாக ‘ஷின் மின்’ நாளிதழ் தெரிவித்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூலை 7ஆம் தேதி) அந்த ஆடவர் அநாகரிகமாக நடந்துகொண்ட விதத்தைப் பற்றி 20 வயது மதிக்கத்தக்க குமாரி ஜுவல் கோ இன்ஸ்டகிராம் தளத்தில் பதிவு செய்தார்.

காலை சுமார் ஏழு மணிக்கு டாக்சியைத் தேடிக்கொண்டிருந்தபோது அந்த ஆடவர் தனது கையைத் திடீரெனப் பற்றிக்கொண்டதாக குமாரி கோ தெரிவித்தார். அதன் பிறகு அவர் ஆபாசமாக நடந்துகொண்டதாக அந்தப் பெண் கூறினார்.

சம்பவம் நடந்த அதே நாளில் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மரணம் விளைவித்த பொறுப்பற்ற செயலுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டை முதலாவது வாரண்ட் அதிகாரி முகம்மது ஃபாரிட் முகம்மது சலே மறுத்துள்ளார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

23 Jul 2019

கிணற்றில் தள்ள சொன்னவர் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்