ஜுவல் சாங்கி விமான நிலைய உணவகங்கள் இயங்குவதில் நேர மாற்றம்

ஜுவல் சாங்கி விமான நிலைய உணவகங்கள் இயங்குவதில் நேர மாற்றம்

1 mins read

இன்றுமுதல் ஜுவல் சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாவது மாடியில் அமைந்துள்ள 'கென்னோப்பி பார்க்'கில் இருக்கும் எட்டு உணவகங்களும் குறைவான நேரத்திற்கு இயங்கும். 'கென்னோப்பி பார்க்' இயங்கும் நேரத்திற்கு ஏற்ப இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

இனி எட்டு உணவகங்களும் காலை ஒன்பது மணிமுதல் பின்னிரவு ஒரு மணிவரை வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் பொது விடுமுறைக்கு முந்தைய நாள் அன்று திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை பத்து மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை உணவகங்கள் இயங்கும். இதன் தொடர்பில் தங்கள் வியாபாரம் இந்நேர மாற்றத்தால் அவ்வளவாகப் பாதிக்கப்படாது என்று சில கடைகள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தன. தங்களின் மொத்த விற்பனையில் பெரிய இழப்பு ஒன்றும் இருக்காது என்றும் உணவகங்கள் இயங்கும் நேரத்தில் செய்யப்பட்டுள்ள இப்புதிய மாற்றத்தால் தங்களின் மனிதவளத்தை மேலும் சிறப்பாகத் திட்டமிட முடியும் என்றும் அவை கூறின.