கொண்டோமிணியம் வீட்டு விலை சரிவு

கொண்டோமிணியம் வீட்டு விலை சரிவு

1 mins read

தொடர்ந்து நான்கு மாதங்களாக ஏறுமுகமாக இருந்த மறுவிற்பனை கொண்டோமிணிய வீட்டு விலைகள் சென்ற மாதம் 0.4 விழுக்காடு சரிந்தது.

சொத்துச் சந்தை நிறுவனமான 'எஸ்ஆர்எக்ஸ் ப்ராபெட்டி' நேற்று வெளியிட்ட இத்தகவலின்படி மே மாதம் இருந்த 0.4 விழுக்காடு வளர்ச்சியை அடுத்து இந்தச் சரிவு ஜூன் மாதத்தில் ஏற்பட்டது.

குறைந்த எண்ணிக்கையில் நகர்ப் பகுதியிலும் மத்திய வட்டாரத்திலும் உள்ள கொண்டோமிணியங்களின் விலைகள் மே மாதத்திலிருந்து மாற்றம் இல்லாமலே இருந்தன. இதற்கிடையே சென்ற ஆண்டின் ஜூன் மாதத்தை ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த கொண்டோமிணிய வீட்டு விலைகள் இவ்வாண்டு 1.6 விழுக்காடு அதிகமாக இருந்தது.