சொகுசு கார்களைக் கவனக்குறைவாக ஓட்டுவோருக்குக் கூடுதல் அபராதம்

சொகுசு கார்களைக் கவனக்குறைவாக ஓட்டுவோருக்குக் கூடுதல் அபராதம்

1 mins read

சாலைப் பாதுகாப்பை வலுவாக்கும் வகையில் சொகுசு கார்களைக் கவனக்குறைவுடன் ஓட்டுவோருக்கு விதிக்கப்படும் அபராதம் உயர்த்தப்படவேண்டும் என்று நேற்று முன்தினம் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் வால்ட்டர் தெசேரா யோசனை கூறினார்.

போக்குவரத்து தொடர்பாகக் குற்றம் புரிவோருக்கு விதிக்கப்படும் அபராதம், வாகனமோட்டியின் வாகனத்தின் திறந்த சந்தை மதிப்பளவுக்கு அமையவேண்டும் என்றார் அவர். இதன்படி ஒரே குற்றத்தைப் புரிந்தாலும் குறைந்த மதிப்புடைய வாகனத்தை ஓட்டியவருக்கும் சொகுசு காரை ஓட்டியவருக்கும் விதிக்கப்படும் அபராதம் வேறுபடும். கூடுதல் வருமானம் பெறும் ஓட்டுநர்கள் குற்றம் புரிவதை இதுபோன்ற வழிமுறை தடுக்கும் என்றார் டாக்டர் தெசேரா.

வருமானம் அடிப்படையில் அபராதம் விதிக்கும் இதுபோன்ற சட்டத்தை ஃபின்லாந்து போன்ற நாடுகள் நடைமுறைப்படுத்தி வந்தாலும் பிரிட்டன் உள்பட சில நாடுகள் இதை செயல்படுத்த முயன்று முன்னோட்டத் திட்டத்தை அடுத்து கைவிட்டுள்ளதாக உள்துறை அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சுன் சூலிங் பதிலளித்தார். இருப்பினும் இத்தகைய சட்டமுறையை நடைமுறைப்படுத்துவதன் சாத்தியத்தையும் தாக்கத்தையும் உள்துறை அமைச்சு ஆய்வு செய்திடும் என்றார்.