தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வு குழு இன்னும் அமைக்கப்படவில்லை

தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வு குழு இன்னும் அமைக்கப்படவில்லை

1 mins read

தேர்தல் தொகுதிகளுக்கான எல்லைகளை மறுஆய்வு செய்திடும் குழு அமைக்கப்படுவதுதான் தேர்தல் நெருங்குகிறது என்பதற்கு ஒரு முக்கிய அறிகுறி. ஆனால் குழு இன்னும் நியமிக்கப்படவில்லை.

குழு அமைக்கப்பட்டுள்ளதா அல்லது எப்போது அமைக்கப்படும் என்று நேற்று முன்தினம் பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங் பிரதமர் லீ சியன் லூங்கைக் கேட்டிருந்தார். பிரதமர் இன்னும் குழுவை நியமிக்கவில்லை என்று திரு லீயின் சார்பாக வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் பதிலளித்தார். அடுத்த தேர்தல் நடத்தப்படும் முறையில் ஏதேனும் புதிய அம்சங்கள் உள்ளதா என்று ஹாவ்காங் தொகுதியின் திரு பிங் எங் ஹுவாட் கேட்டிருந்தார். வாக்குச் சாவடி, வாக்கு எண்ணிக்கை நடக்கும் முறை போன்றவற்றில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று திரு சான் சில புதிய திட்டங்களைச் சுட்டி விளக்கமளித்தார்.