கோ: அமெரிக்கா, சீனா சச்சரவைத் தணிப்பதில் சிறிய நாடுகளுக்கும் பங்குண்டு

கோ: அமெரிக்கா, சீனா சச்சரவைத் தணிப்பதில் சிறிய நாடுகளுக்கும் பங்குண்டு

2 mins read

உலகளவில் அரசியல் மிரட்டல் அளித்து வரும் அமெரிக்கா, சீனாவின் மோதலுக்கு எதிராக அனைத்து நாடுகளும் குரல் கொடுத்தால் ஓர் அமைதியான, செழிப்பான உலகத்தையும் எதிர் காலத்தையும் நிச்சயம் பெறலாம் என்று ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் (படம்) நேற்று கூறினார்.

பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக அமைதி கருத்தரங்கில் கூடியிருந்த உலகத் தலைவர் களிடம் திரு கோ இதனைத் தெரிவித்தார்.

சென்ற மாதம் ஒசாகாவில் நடந்த ஜி-20 மாநாட்டில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சந்தித்துப் பேசினர். இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமாக நடைபெறும் அறி குறியாக இச்சந்திப்பு இருந்தது.

ஆனால் இருதரப்பும் நம் பிக்கை வைப்பதில் குறைபாடு உள்ளது. இக்குறைப்பாட்டைச் சரிசெய்ய சில காலம் பிடிக்கும் எனத் திரு கோ தம் உரையில் குறிப்பிட்டார். அதுவரை வரலாற் றின் பிடியில் சிக்கியவாறு உலகம் ஒரு நிச்சயமற்ற நிலை யில் சந்தேகங்களுக்கும் தவறான கருத்துகளுக்குமிடையே இருக்கலாம்.

அத்துடன் வல்லரசுகளுக்கு இடையே நிலவும் இம்மோதலால் உலகம் நிலைகுலையும் வாய்ப்பும் உள்ளது என்றார் அவர்.

பொருளாதாரத்தில் இரு பெரும் சக்திகளும் நானா நீயா என்று போட்டி போட, நிலைமை எவ்வாறு உருவெடுக்கிறது என்று சிறு சிறு நாடுகள் வேடிக்கைதான் பார்க்கும். அதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கையை அந்நாடுகள் முடிவெடுக்கும்.

ஆனால் அது ஏற்ற செயல் அல்ல என்றும் சிறிய நாடாக இருந்தாலும் சாதகமான முறையில் பங்காற்றி அனைவருக்கும் பாது காப்பான, அமைதியான உலகம் அமையச் சேர்ந்து செயல்படலாம் என்றும் திரு கோ அறிவுறுத்திப் பேசினார்.