மாறுபட்ட அணுகுமுறையுடன் இருநாள் வேலைச் சந்தை

மாறுபட்ட அணுகுமுறையுடன் இருநாள் வேலைச் சந்தை

2 mins read
bd50bd99-8eb4-41f2-a76e-088fa220c538
முன்னரே வேலைக்கு விண்ணப்பித்தோர், நிகழ்வின்போது வரிசையில் நின்று தங்களுக்கான சீட்டைப் பெற்றுக்கொண்டு உடனே முதலாளிகளால் பேட்டி காணப்பட்டனர். படம்: ஃபாஸ்ட்ஜாப்ஸ் -

ஊழியரணியில் இணைய விரும்புவோரும் வேலை தேடும் பணிகள் சுமுகமாகவும் துரிதமாகவும் அமைவதை நாடுவோரும் 'ஃபாஸ்ட்ஜாப்ஸ்' நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த வேலைச் சந்தை மூலம் பலனடைந்தனர்.

ஊழியர்கள் அதிகம் தேவைப்படும் துறைகள் உணவு, பானங்கள் துறை மற்றும் சில்லறை வர்த்தகத் துறை என்று இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டம் தொடர்பிலான தம் உரையில் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் குறிப்பிட்டிருந்ததைத் தொடர்ந்து அவ்விரு துறைகளிலும் ஆள் சேர்ப்பதில் நிறுவனம் கவனம் செலுத்தியது. நடமாடும் வேலைத் தளமான 'ஃபாஸ்ட்ஜாப்ஸ்', 'டிரேனிங் விஷன்' கழகத்துடன் இணைந்து கடந்த இரு நாட்களில் அதன் முதல் வேலைச் சந்தை மற்றும் கற்றல் விழாவை ஏற்பாடு செய்திருந்தது.

"வேலைக்கு விண்ணப்பித்தோர் பொதுவாக முதலாளிகள் பதில் அளிக்கும்வரை காத் திருக்கவேண்டும். ஆனால் ஏற்கெனவே விண்ணப்பித்து இவ்வேலைச் சந்தையின்போது முதலாளிகளைச் சந்தித்துப் பேச இங்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது," என்றார் நிகழ்வை அதிகாரபூர்வமாகத் தொங்கி வைத்த தென்மேற்கு சமூக மேம்பாட்டு மன்ற மேயர் டாக்டர் முகம்மது மாலிக்கி ஒஸ்மான்.

வேலைச் சந்தைக்கு வந்திருந் தோர் அங்கேயே முதலாளிகளைச் சந்தித்தனர். வேலைக்குத் தகுதி பெறுவது குறித்து உடனே அறிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. பிடோக் டவுன் ஸ்குவேர் வட்டாரத்தில் இடம்பெற்ற இவ்வேலைச் சந்தையில் கிட்டத் தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட நிறு வனங்கள் இடம்பெற்றன.

காப்பி தயாரிப்பவர், சேவை வழங்குபவர் போன்ற வேலைகள் தொடர்பாகவும் தலைமைத்துவப் பொறுப்புகளை ஏற்பதன் தொடர்பாகவும் முதலாளிகள் ஆள் தேடுவதாக விளம்பரம் செய்திருந்தனர்.

'ஃபாஸ்ட்ஜாப்ஸ்' நிறுவனத்தின் இணையத்தளம் மூலம் ஏற்கெனவே வேலைகளுக்காக விண்ணப்பம் செய்திருந்தோரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலைக்குத் தகுதியுடையவர்கள் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பின்னர் வேலைச் சந்தையில் தங்களை வேலைக்கு நியமிக்கக் கூடிய முதலாளிகளைப் பேட்டிமூலம் சந்தித்துப் பேச முன் பதிவு செய்யப்பட்டனர். இணைய விண்ணப்பத்திலிருந்து நேரடி பேட்டிக்குச் செல்லும் இதுபோன்ற அணுகுமுறை மற்ற வேலைச் சந்தைகளிலிருந்து சற்று மாறுபட்டது. வேலைச் சந்தையின் முதல் நாள் அன்றே, முன்பதிவு செய்திருந்தோருடனும் மற்றவர்களுடனும் நடத்தப்பட்ட பேட்டிகளின் எண்ணிக்கை 600க்கும் மேல் எட்டியது.