80,000 வெள்ளி பெறுமானமுள்ள போலி சொகுசுப் பொருட்கள் பறிமுதல்

80,000 வெள்ளி பெறுமானமுள்ள போலி சொகுசுப் பொருட்கள் பறிமுதல்

1 mins read
83af674e-5d52-43aa-a441-fe14db51f8e0
-

ஃபார் ஈஸ்ட் கடைத்தொகுதியிலுள்ள சில சில்லறை விற்பனைக் கடைகளில் போலிசார் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து போலி சொகுசுப் பொருட்களை விற்கும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய புலனாய்வுப் பிரிவு நடத்திய இந்த 16 மணி நேரச் சோதனையில் 26 வயதுக்கும் 54 வயதுக்கும் இடைப்பட்ட நான்கு பெண்களும் இரண்டு ஆடவர்களும் பிடிபட்டனர். ஏழு கடைகளில் சோதனை நடத்திய அதிகாரிகள், 500க்கும் மேற்பட்ட போலிப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். சொகுசு நிறுவன முத்திரைகளைக் கொண்ட காலணிகள், கைக்கடிகாரங்கள், பைகள், தொப்பிகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட 80,000 வெள்ளி.

போலிசாரின் விசாரணை தொடர்கிறது. அறிவுசார் சொத்துரிமை மீறல்களைக் கடுமையாகக் கருதுவதாக சிங்கப்பூர் போலிஸ் தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

போலி நிறுவன அடையாள முத்திரைகளைக் கொண்ட பொருட்களை விநியோகம் செய்பவர்களுக்கும் அத்தகைய பொருட்களை விற்பவர்களுக்கும் ஐந்தாண்டு வரையிலான சிறைத்தண்டனை, 100,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.